Tuesday, June 13, 2017
கொர்கை or கொற்கை வீரட்டேஸ்வரர் திருக்கோவில்
This is near Mayiladuthurai...as I visited this temple from Mayiladuthurai couple of years back...
குறுங்கை என்பதே கொற்கை என்று நாளடைவில் மருவியதாக கூறப்படுகிறது. செவி வழிச் செய்தியாக கிடைத்த தகவல், ஒரு காலத்தில் முனிவர் ஒருவர் இங்கே வந்து வழக்கம் போல் தனது கையை உயர்த்தி கங்கையை வரவழைக்க முயன்று தோற்று விநாயகரை வழிபட விநாயகரும் கையை உயர்த விநாயகரின் கை குறுகியதாம்...பின்னர் அசரீரீயாக இந்த திருக்கோவில் குளத்து நீரே கங்கைக்கு சமானம் என்று கேட்க முனிவர் குளத்து நீரையே அபிஷேகத்துக்கு பயன் படுத்தினாராம். இங்கே இருக்கும் ஒரு விநாயகருக்கு குறுங்கை விநாயகர் என்று பெயர் உள்ளது...
சென்ற போது கோவிலின் நிலையும் திருக்குளத்தின் நிலையும் மனதுக்கு சங்கடமாக இருந்தது. இந்தக் கோவிலில் தான் சிவன் காமனை எரித்ததாக கூறப்படுகிறது. கோவிலுக்கு அருகில் வீபூதிக் குட்டை என்று ஒரு இடம் இருக்கிறது...அந்த இடத்தில் தான் மன்மதன் எரிந்து சாம்பலானான் என்றும் அந்த இடத்தில இருந்து மண்ணை (வீபூதியை) மக்கள் எடுத்து செல்கிறார்கள் என்றும் அங்கு இருந்தவர் ஒருவர் கூறினார்.திருநாவுக்கரசர் பாடல் பெற்ற திருக்கோவில் இது...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment