Tuesday, June 27, 2017

சாதியை சீண்டிய சினிமா

ஒரே கதையை பல முறை சினிமாவில் சொன்ன பெருமை எந்த கதை என்றால், பலரின் பதில் 'நந்தனார்'. நந்தனார் என்றும் திரு நாளை போவார் என்றும் அழைக்கப் பட்ட சிறந்த சிவ பக்தர்.
நந்தனாரை சாதிக் கொடுமைக்கு உதாரணமாக மக்கள் எல்லோருக்கும் எடுத்து சென்ற பெருமை சினிமாவுக்கு உண்டு. ஆனால் இந்த சினிமா ஏன்தான் தீயில் தன்னையே அர்ப்பணித்த ஒரு சிறந்த அரசன், சிவ பக்தன் மற்றும் சிறந்த வீரன் புகழ் சோழ நாயனாரை கண்டுகொள்ள வில்லையோ?
சதி(உடன் கட்டை ஏறுதல் என்றும் சொல்வர்),சாதி பேசும் மக்களுக்கு புகழ் சோழ நாயனார் ஏன் தன்னை தீயில் அர்ப்பணித்தார் என்று தெரிய வேண்டுமா? உண்மையில் சினிமா மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் புகழ் சோழ நாயனார் போன்றவர்களின் புகழை உலகம் அறிய செய்ய வேண்டும்.
http://www.kamakoti.org/tamil/dk6-19.htm
ஆனால் வாஸ்தவத்தில் அறுபத்து மூவர் சரித்திரங்களுக்கு அதாரிட்டியான பெரிய புராணத்தில் வருகிற நந்தனார் கதையில் அந்த வேதியல் பாத்திரமே கிடையாது. பெரிய புராணத்தில் திருநாளைப் போவார் நாயனார் புராணம் என்ற தலைப்பில் வருகிற நந்தனாருடைய கதையைப் பார்த்தாலே தெரியும்....
உண்மையான நந்தனாரை தெரிந்து கொள்ள மேலே படியுங்கள்.

No comments:

Post a Comment