Wednesday, June 7, 2017

பாரதிக்காக நாம் - ஒரு பக்கம் பத்திரிக்கையில்

பாரதிக்காக நாம் என்று ஒரு பக்கம் கொடுத்து, "அந்தந்த ஊரில் நடக்கும் பொதுக்காரியங்களையும், அவரவர் மனதில் படும் புதுயோசனைகளையும் தெளிந்த தமிழிலே எழுதி தமிழ்ப் பத்திரிகைகளுக்கு அனுப்புதல் மிகவும் ஸுலபமான காரியம். ஜனத்தலைவர்களால் இக்காரியம் செய்ய முடியாத பக்ஷத்தில் பிறருக்குச் சம்பளம் கொடுத்தாவது செய்விக்க வேண்டும்…" என்ற பாரதியின் கட்டளையை இனிமேலாவது நிறைவேற்றலாமே. இவ்வாறு சாதாரண ஜனங்களுக்கு அவர்களின் ஆக்கபூர்வமான சிந்தனைகளை ஊக்குவித்து அவற்றை பிரசுரிப்பதன் மூலம் சமூகத்துக்கு உங்கள் பத்திரிகை மிகச் சிறந்த சேவையை செய்ய முடியும். அந்தக் கருத்துக்களை படிக்கும் வாசகர்கள் அக்கருத்துக்களால் சிறப்படைவதோடு அக்கருத்துக்களை நிஜப்படுத்த முனைவார்கள். அதுவே உண்மையான வெற்றி.அதுதான் பாரதிக்கு நாம் கொடுக்கும் உண்மையான மரியாதை.இவற்றை செயல் படுத்த இன்றே ஒரு பக்கம் பாரதிக்கு நம் என்று ஒரு பக்கம் ஒதுக்குவோம். http://www.tamilvu.org/library/lA450/html/lA450cnt.htm

No comments:

Post a Comment