Sunday, October 22, 2017

உணவு, உடை,உறக்கம்

மனிதனுக்குத் தேவையான உணவு, உடை,உறக்கம்(வீடு) இந்த மூன்றையும் அனைத்து மக்களுக்கும் கொடுத்து விட்டு ஸ்மார்ட் கிளாஸ், புல்லட் train , இலவச laptop கொடுங்க நல்லது...உணவு, உடை,உறக்கம்(வீடு) இதெல்லாம் இல்லாமல் ஸ்மார்ட் கிளாஸ், புல்லட் train , இலவச laptop கொடுப்பதெல்லாம், foreign companyக்கு (அப்போ East India, இப்போ MNCs)கப்பம் கட்டும் கைதிகளின் கொக்கரிப்புதான்...busல டிவி என்னு சில வருடங்கள் முன்னால் வைத்தார்கள்(தமிழன் பேருந்தில் போகும் போதுகூட சுயமா சிந்தித்து விடக்கூடாது என்பதில் எவ்வளவு கவனம்)....இப்போ என்னாச்சுன்னு பாருங்கள்.
இதுல எத்தனை கோடி செலவு?யாருக்கு இதில் லாபம்?

Monday, October 16, 2017

எங்கே செல்கிறது தமிழகம்

எத்தனை பாரதி வரவேணும் தமிழகத்தை சீரமைக்க. நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்... குடி குடியைக் கெடுக்கும் என்று எழுதியும், அந்த குடியை வியாபாரமாக பார்க்கும் குடியாட்சி...உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, உறங்க வீடின்றி தவியாய் தவிக்கும் தமிழர்களை பார்க்க நெஞ்சு பொறுக்குதில்லையே. ஆனால் இங்கே மக்கள் ஆட்சி என்றும் குடியாட்சி என்றும் சொல்லி 500 கோடிக்கு உடலை கெடுக்கும், உறவைக் கெடுக்கும் குடி வியாபாரத்துக்கு அரசு தயார் ஆகிறது. http://www.dinamalar.com/news_detail.asp?id=1876919 எங்கே செல்கிறது தமிழகம்..."வார விடுமுறையில், மது விற்பனை, 100 கோடி ரூபாயை தாண்டும். இதை விட, ஆங்கில புத்தாண்டு, பொங்கல் போன்ற நாட்களில் விற்பனை எகிறும்.இந்நிலையில், நாளை தீபாவளி கொண்டாடப்படுவதால், 500 கோடி ரூபாய்க்கு, மதுபானங்கள் விற்பனையாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது." இந்தக் கோடிகளை மக்கள் மக்களுக்காக நல்ல வீடுகள் கட்டி வீடில்லாதவர்களுக்கு அவற்றைக் கொடுக்கலாமே..இந்த சிந்தனை மக்களுக்கும் அரசுக்கும் வருமா? ஊடகங்கள் இந்த சிந்தனையை மக்களுக்கும் அரசுக்கும் எடுத்து சொல்வார்களா? தெய்வத் தமிழ் நாட்டிலே 63 நாயன்மார்கள் வாழ்ந்தார்கள் என்றும், சேர, சோழ, பாண்டிய பல்லவ மன்னர்கள் ஆட்சி புரிந்தார்கள் என்றும், மநு நீதி சோழன், கண்ணகி போன்றவர்கள் வாழ்ந்தார்கள் என்றும் படித்தோம்...அவற்றை எல்லாம் மறந்து இன்று ஏன் இந்த நிலை?எங்கே செல்கிறது தமிழகம்?

Sunday, October 15, 2017

Caste gives security to Hindus

While criticizing caste as bad, we never forget to say, its contradiction,"Work is Worship". This is exactly the idea behind Caste, receive the same old work from father and do it as worship to God and realize God...humbly.
“நாய்க்குக் கெட்ட பெயர் சூட்டித் தூக்கில் போடு” (Give the dog a bad name and hang it) என்று ஆங்கிலத்தில் ஒரு வசனம் சொல்வார்கள். நாய் நன்றியறிதலும் விசுவாசமும் உள்ள பிராணி. அதைத் தூக்கில் போடுவதை யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அதனால் அதற்கு ஒரு கெட்ட பெயரைக் கொடுத்துவிட்டு, எவனோ தூக்கில் போட்டான் போலிருக்கிறது!
நவீன நாகரிக சீர்திருத்தக்காரர்கள் நமது தர்ம சாஸ்திரங்களின் விஷயத்தில் இதையேதான் செய்கிறார்கள். யுகாந்திரமாக, இந்தத் தேசத்துக்குப் பரம க்ஷேமத்தைச் செய்துவந்த அந்த தர்மங்களால் ஏதேதோ கொடுமைகள் நேர்ந்ததாகச் சொல்லி, கெட்ட பெயரை உண்டாக்கி, அவற்றைத் தூக்கில் போடப் பார்க்கிறார்கள். நம் சனாதன சாஸ்திரங்கள் வரையறை செய்து தந்த சமூகப் பாகுபாடு (வர்ண தர்மம்) கூடாது என்று சிலருக்குத் தோன்றுகிறது.
http://www.kamakoti.org/tamil/part1kural47.htm Everyone appreciates Chanakya...Do we know what he said about Caste? Read on..
Its no strange...Under Religious Education, children in Sweden are learning the same...That Caste A Security to Hindus...
வேதமறிந்தவன் பார்ப்பான்
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்
நீதிநிலை தவறாமல் – தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்
பண்டங்கள் விற்பவன் செட்டி – பிறர்
பட்டினி தீர்ப்பவன் செட்டி
தொண்டரென்றோர் வகுப்பில்லை
தொழில் சோம்பலைப் போல் தொழிலில்லை
நாலு வகுப்புமிங் கொன்றே – இந்த
நான்கினில் ஒன்றுகுறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே – செத்து
வீழ்ந்திடும் மானிடச்சாதி
--பாரதி

Saturday, October 14, 2017

Swachh Bharath - Chennai Coporation's help needed

Again after few weeks, today part of Swachh Bharat initiative of Sri Ramakrishna Mission, Mylapore. They are doing every Sundays.
Today it was in Ramakrishna Mission, Free Tuition Centre, at Ramakrishnapuram, Mylapore. Many of the volunteers were children...Thanks to PS Matriculation School, Awakened Citizen Program,(ACP) trained teacher Ms Koteeswari...She came along with students from her school. School has been doing their part on Swachh Bharat,as the Principal is very committed to these initiatives just as she is interested with ACP.
Many students represented nearby schools from Mylapore...Today there were students from PS Hr, Santhome Hr among other schools...
Seen here a boy removing the poster pasted like in many public walls, bridges, parks, buses. I wish that Chennai Corporation can bring strict laws to punish those who past posters and litter the Chennai city. Though these volunteers are nice to do work, is it not wrong on the part of Chennai corporation not taking enough steps/initiative to get rid of this menace of poster culture?
Seen this boy removing poster from another day of Ramakrishna Mission Swachh Bharath on Chitrakulam. This volunteer boy removing poster from Chitra Kulam gate... More photos of todays Swachh Bharath https://photos.app.goo.gl/c7UkyDGXmpYveeJH3

Tuesday, October 3, 2017

கல்வியின் முதல் நோக்கம்

In Bhagavd Gita, Krishna says, among the vidyas I am the Atma Vidya...Where are we today from such Vidya? When is the day that our educationists and Principals/Teachers/Parents and Education Ministers read on and think on these lines to provide such education? Kanchi MahaSwamigal says, http://www.kamakoti.org/tamil/part1kural65.htm
நம் பாரத நாட்டின் முற்காலக் கல்வியின் முதல் நோக்கம் மன அமைதியை அடைவதேயாகும். புதிது புதிதாகத் தோன்றும் பௌதிக விஞ்ஞான ஆராய்ச்சித் துறைகளில் மேன்மேலும் கல்வியைப் பெருக்குவதில் தவறில்லை. ஆனால், அதன் பயனை தர்ம மார்க்கத்தில் மட்டுமே உதவுமாறு செய்தால்தான் நாடும் மக்களும் உயர்வான அமைதி நிலையை அடைய முடியும். இவ்வாறில்லாமல் புலன்கள் போன வழியே அவைகளை பிரயோஜனப்படுத்திக் கொண்டிருந்தால், எத்தனை படிப்பும் விஞ்ஞான அறிவும் இருந்தாலும் கெட்ட எண்ணங்களும் துராசைகளுந்தான் வளரும். இன்னல்களும் துன்பங்களும் பெருகும்.
உண்மையான கல்வி என்பது ஆத்மஞானம் அடைய உதவுவதேயாகும். ஆத்ம ஞானத்தாலேயே மக்கள் அமரத்துவம் அடைகிறார்கள். எதற்கு மேலாக ஒரு பயன் உலகில் இல்லையோ அந்தப் பயனை உண்மைக் கல்வி அளிக்கிறது. மற்ற விதமான கல்விப் பயிற்சிகளெல்லாம் உலகப் பயன்களைத்தான் அளிக்கின்றன. ஆனாலும் அவையும் படிப்படியாகப் பரமாத்மாவை சேர உபயோகப்படலாம். உலகப் பயன் என்பது பொதுவாகப் பொருள் திரட்டுவதையே குறிக்கின்றது. பொருள்கூட பலவித தருமங்களை செய்யப் பயன்படுகிறது. லௌகிக தருமங்களும் பிரம்ம ஞானத்துக்குத் சாதகமாகின்றன. ‘தனக்கு விதிக்கப்பட்ட கர்மங்களைச் சரிவர நடத்துவதாலும், தவத்தினாலும், இறைவனை வணங்கி வழிபடுவதாலும் ஒருவன் ஆத்ம ஞானத்தை அடைகிறான்’ என ஆதி ஆசாரியர்கள் கூறியுள்ளார்கள்.
நம் புலன்களுக்கு மட்டுமே சுக உணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் எளிதில் தரக்கூடிய வகையில் உள்ள எல்லா அம்சங்களையும் போதனா முறையிலிருந்து விலக்கவேண்டும். மேலை நாட்டவரின் நடை, உடை, பாவனை, உணவு, உரையாடல் முதலியவைகளில் ஈடுபட்டு அவைகளைக் கையாளுவோமேயானால் படிப்படியாக நமது பண்பாடு, அறம் இவைகளிலிருந்து நாம் நழுவி, நமது ஆன்ம நலனுக்கு இடையூறு செய்துகொள்வதோடு, புண்ணிய பூமியாகிய இந்தப் பாரத நாட்டுக்கே கெடுதல் ஏற்படுத்தி விடுவோம்.
பாரத நாட்டில் தற்காலம் நமது மக்கள் பெரும்பாலும் சிறு பிராயம் முதலே தம் தேசத்துக்குரிய ஒழுக்கம், பண்பாடு, இறைவணக்கம், ஆத்ம தியானம், இவ்விதமான பழக்கமே இல்லாமலிருந்து வருகின்றனர். விஞ்ஞானத்தைப் பயில்வதில் மட்டுமின்றி வாழ்முறையிலும்கூட வெளிநாட்டாரது முறைகளையே பின்பற்றி வருகின்றனர். இதனால் மக்களுக்கு இந்த உலகத்தின் சாமானிய இன்பத்தையும் மறு உலகத்தின் பேரின்ப வழியையும் அடையத் தடை ஏற்படுகின்றதென்பது தெளிவு. ஆஸ்திகப் பரம்பரையில் தோன்றிய நமது குழந்தைகளுக்குச் சிறு வயது முதலே நமது பண்புக்குரிய தர்மம், ஒழுக்கம், பக்தி, ஞானம் முதலியவற்றைக் கடைப்பிடித்து ஒழுகுவதற்கு அநுகூலமான கல்வியைப் போதிக்க வேண்டியதே நம் முதற் கடமை.

சலங்கை பூஜை மேடை அலங்காரம்

கோவில்களை சுத்தம் செய்ய வேண்டும்....
சாமி சிலைகளை அலங்கரிக்க வேண்டும்.....
கோவில் வாசல்களுக்கு தோரணம் வேண்டும்....
இங்கே மேடைகளை அலங்கரித்து மகிழ்கிறார்கள்...
சலங்கை பூஜை என்றும் மற்றும் பல பெயர்களில் நடன நிகழ்ச்சிகளில் மேடை அலங்காரம் என்னை இவ்வாறு சிந்திக்க தூண்டியது.
தெய்வத்தின் குரல் இதோ
http://www.kamakoti.org/tamil/3dk244.htm
தேவதாஸி ஒழிப்பு ஒரு பக்கம் பண்ணிக் கொண்டு, இன்னொரு பக்கம் கலை அபிவிருத்தி என்று குல ஸ்த்ரீகளையெல்லாம் மேடைக்கு ஏற்றி டான்ஸ் பண்ண வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெரிய மநுஷ்யர்கள் வீட்டுப் பெண் குழந்தைகளுக்கு அக்ஷராப்யாஸம் மாதிரி பரத நாட்டிய அப்யாஸமும் ஏற்பட்டு விட்டது. ஸ்திரீ ரூபத்திலே ஒரு ஸதஸிலே மேடை ஏறி, ஆடை அலங்காரங்களோடு நவரஸங்களைக் காட்டி ஆடுகிறதென்றால் அதனால் ஸாதாரண மநுஷ்யர்கள் இருக்கிற ஸ்திதியில்……. நான் சொல்ல வேண்டாம். ‘நமக்கு ரூபமிருக்கிறது, ஆடத் தெரிகிறது. ஸபையை வசீகரித்து அப்ளாஸ் வாங்க முடிகிறது என்றால் அப்புறம் ‘ஏன் ஸினிமாவில் சேர்ந்து இன்னம் ஜாஸ்தி புகழ் வாங்கக் கூடாது?’ என்று ஆசை உண்டாகிறது. குல ஸ்திரீகளுக்கு இப்படிப்பட்ட எண்ணங்கள் உண்டாகிப் பல பேரோடு நடிப்பது, ஜனரஞ்ஜகம் என்பதற்காக இறங்கிக் கொண்டே போவது என்றெல்லாம் ஆகின்றன. கலையை வளர்க்க வேண்டியதுதான். அதற்காக அதைவிட இந்த தேசப் பெருமைக்கு மூச்சாக இருக்கிற ஸ்த்ரீ தர்மத்தைப் பலி கொடுக்க வேண்டியதில்லை. இதையெல்லாம் யோசிக்காமல் ஸமூஹ சீர்திருத்தம், கலை வளர்ச்சி என்று செய்கிற கார்யங்கள் தேவதாஸிகள் என்று ஒரு ஜாதி மட்டும் தனியாயிருப்பானேன் என்று ……. இப்போது எல்லாவற்றையும் ‘டெமாக்ரடைஸ்’ பண்ணிப் பார்ப்பதாகத் தானே இருக்கிறது? இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது. எல்லாக் கலைகளையும், தொழில்களையும் ஒழுங்காக வளர்ப்பதற்குத்தான் வர்ண வியவஸ்தை, ஜாதி வியவஸ்தை ஏற்படுத்தப்பட்டது. ஏதாவது ஒரு ஜாதியில் வியவஸ்தை கெட்டிருந்தாலும் அதைச் சீர்படுத்தி அதற்கான தொழிலை அதனிடமே விட்டு வைப்பதுதான் பொது தர்மம் கெடமாலிருப்பதற்கு வழி.