Thursday, September 14, 2017
கோடிகோடி கடன் வாங்கி bullet train ஓடுவோம்
கோடி கோடி IPL கிரிக்கெட் க்கு கொடுப்போம். கோடி கோடி சினிமா எடுத்து பார்த்து ரசித்து மகிழ்வோம்...கோடி கோடி பணத்தை சில மணி நேரத்தில் பட்டாசு வெடித்து மகிழ்வோம்...கோடிகோடி கொடுத்து அல்லது கடன் வாங்கி bullet train ஓடுவோம் ஆனால் நம் ஏழை மக்கள் நம் கண்ணுக்கு தெரிவதில்லை...அவர்களுக்கு ஒரு வீடு இருக்கா என்று சிந்திக்க மாட்டோம்.அவர்களின் வாழ்வு உயர என்ன செய்யலாம் என்று சிந்திக்கிறோமா?
சேவாலயாவில் ஜப்பான் நாட்டு மக்களின் பணமும் British பெண்களின் உழைப்பையும் பார்த்தாவது நம்மை நாம் திரித்திக் கொள்வோமா?
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்.
நான் +2 படித்த போது என் நண்பன் 'வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பீர் என்ற அரசாங்க விருப்பத்தையும், முதலில் எங்களுக்கு வீடு கொடுங்கள் என்ற வீடில்லா மக்களின் விருப்பத்தையும்' புதுக் கவிதை என்று கூறியது எனக்கு நினைவுக்கு வருகிறது.இன்று 25 ஆண்டுகளுக்குப் பின்னல் 'வீட்டில் கழிவறை கட்டுங்கள் என்கிறது அரசு. மரம் வளர்ப்போம் என்பதை மறந்தார்கள், வீடில்லா மக்களுக்கு வீடு கட்ட வேண்டும் என்பதையும் மறந்து விட்டார்கள்.' ஆனால் தூய்மை இந்தியா மட்டும் வேண்டுமாம். வீடே இல்லாதவன் எங்கே போய் கழிவறை கட்டுவான், அல்லது அவன் எங்கே போய் உறங்குவான்? தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. இன்றோ எத்தனை விவசாயிகள் உணவு இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் இருக்க இவர்கள் bullet train கடன் பட்டு ஓட வேண்டுமாம். என்ன ஒரு மக்கள் ஆட்சி.மகாத்மா காந்தி பிறந்த இந்தப் பூமியில் இந்தக் கொடுமையை யார் தடுப்பார்கள்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment