Monday, September 18, 2017
பெரியாராம் பெரியார் இவர் யார்?
பெரியாராம் பெரியார் இவர் யார் என்று பார்த்தால்...UNESCO இவருக்கு விருது கொடுத்துள்ளதாம், தமிழ் நாட்டிற்கு ஹிந்தி வேண்டாம் என்றும் ஆங்கிலம் வேண்டும் என்று கூறிய தெலுங்கருக்கு யுனெஸ்கோ விருது கொடுத்ததில் ஆச்சரியம் இல்லை....தமிழ் நாட்டின் (நல்ல)தலைவர்களுக்கு அன்றே பஞ்சம் வந்து விட்டது...இவர் நிஜமாகவே பெரியாரா இல்லை சிறுமை செய்தவரோ...70 வயதில் 32 வயது பெண்ணை(மகள்,பேத்தி வயதுக்கு) மணம் முடித்து முற்போக்கு திருமணத்தை ஆரம்பித்தவர் தான் பெரியாரா? சாதி இல்லை (இந்துக்)கடவுள் இல்லை என்றெல்லாம் கூற இந்துக்களின் தாராள சுதந்திரம் இடம் கொடுத்துள்ளது....இவர்களுக்கு கிறிஸ்தவ மதத்திலும் சரி சீக்கிய மதத்திலும் சரி சாதி இருக்குன்னு தெரியாத பெரியாரோ? இன்னும் வேடிக்கை என்ன வென்றால் இந்துக் கடவுள் இல்லை என்றவருக்கு மலர் தூவி, மாலை போட்டு அவரின் சிலைக்கு மரியாதை செய்தது, மிகவும் முற்போக்கு கொண்ட செயல். அந்த சிலைக்கு பால், அபிஷேகமும், கற்பூரமும் காட்டினால் இந்துக் கடவுள் இல்லை என்றவருக்கு கோவிலே கட்டி வழிபடுவார்கள் இவரை பெரியார் என்று அழைக்கும் சிறியவர்களின் கூட்டம்.
கடவுளின் திருவுருவப் படங்களை எரித்து சிறை சென்றவர்கள் எல்லாம் இந்த தெய்வத் தமிழ் நாட்டில் தலைவர்களாம் பெரியாராம்...இப்போது இந்த மாதிரி புறப்பட்டால் யார் பின்னால் வருவார்கள்...அந்த மாதிரித் தான் இனிவரும் காலம் இந்த ஹிந்தி,சமஸ்க்ரித எதிர்ப்பு எல்லாம்...வருங்காலத்து சரித்திரத்தில் வெறும் கேலிக் கூத்துதான்.அறிவுள்ளவர்கள் இங்கே யார் பெரியார் அல்லது சிறுமையில் பெரியார் என்று சிந்திக்கட்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment