Sunday, September 3, 2017

நினைக்க முக்தி தரும் திருவண்ணாமலை

நினைக்க முக்தி தரும் திருவண்ணாமலை.இதன் அர்த்தம் இந்த கோவிலின் புராண வரலாறு. ஆணவத்தால் பிரம்மாவும் விஷ்ணுவும் தாம் தான் பெரியவர் என்று வாதிட்டு தொற்றுப் போன ஸ்தலம்...மலையே லிங்கமாக, சிவன் பிரம்மாவின்,விஷ்ணுவின் ஆணவத்தை அழித்த ஸ்தலம். இறைவனை நினைத்தால் ஆணவம் அழியும், ஆணவம் அழிந்தால் முக்தி. இதை ரமண மஹரிஷி மனோ நாசம் என்று மனதை ஆணவம் என்றும் அது அழிந்தால் முக்தி என்றும் சொல்லுவார்.
அருணகிரி நாதர் கோபுரத்தில் கிளியாக இருப்பதாக ஐதீகம், அந்தக் கோபுரத்திற்கு கிளிக்கோபுரம் என்று பெயர். அந்தக் கிளிக்கோபுரத்தில் இருந்து கிளிகள் பறந்ததை படம் பிடித்ததில் ஒரு சந்தோஷம். இக்கோவிலை கட்டியவர்கள் எந்த கல்லூரியில் பயின்றார்கள்?நம்மால் இன்று முன்னேற்றம் என்று கூறிக்கொண்டு இம்மாதிரி கோவில்களை கட்ட முடியுமா?அந்தக் காலத்து கல்வியின் சிறப்பை என்று தான் உணர்வோம்?

No comments:

Post a Comment