Tuesday, September 19, 2017
வெள்ளம் வெள்ளம் மும்பையில் வெள்ளமாம்.
வெள்ளம் வெள்ளம் மும்பையில் வெள்ளமாம்.
ஒவ்வொரு வருடமும் நம் நாட்டில் மழை பெய்து நகரங்களிலும் கிராமப்புற பகுதிகளில் வெள்ளம் வருவதாக படிக்கிறோம். இந்த மழை நீரை சேமித்து கோடை காலங்களில் பாசனத்துக்கு உபயோகிக்கலாமே? செய்கிறோமா? நாட்டில் ஒரு பகுதி வெள்ளத்தாலும் வேறு ஒரு பகுதி வறட்சியாலும் பாதிக்கப் படுவதை பார்க்கும் போது 'திட்டமிடல்' என்பது நம் நாட்டில் உள்ளவர்களுக்கு தெரியாத வார்த்தை போல் தோன்றுகிறது.
அதே போல் தக்காளி/உருளை அதிக விளைச்சல் என்று கூறி தெருவில் கொட்டுவார்கள். இன்னொரு பகுதியில் தக்காளி/உருளை விளைச்சல் குறைவால் விலை அதிகம் என்று செய்தி வரும்.
இன்று அறிவியல் விஞ்ஞான வளர்ச்சி கண்டுவிட்டோம் என்று பெருமை சொல்லி சிறுமைகளை செய்திகளில் படிக்கிறோம்.
இதயம் விரிந்தால் மட்டுமே சக மனிதர்களுக்கு உதவ முன் வருவோம். இல்லையேல் எத்தனை அறிவியல் விஞ்ஞான வளர்ச்சி வந்தாலும் இந்த வெள்ளம்/வறட்சி போய் விடாது.
இது பற்றி எல்லாம் சிந்திக்காமல் நாம் உணவை எவ்வாறு பதக் படுத்தி வைக்கலாம் என்று ஆராய்ச்சி வேற பண்ணுறோம். இருக்கிறத பகிர்ந்துக்க தெரியல்ல..என்ன சொல்றது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment