Friday, September 1, 2017

ரூ.5.5 லட்சம் கோடி செலவில் 60 நதிகள் இணைப்பு திட்டம்

ரூ.5.5 லட்சம் கோடி செலவில் 60 நதிகள் இணைப்பு திட்டம்
http://www.dinamalar.com/news_detail.asp?id=1846332
நம் முன்னோர்கள் நீருக்கு என்ன செய்தார்கள்? மழைக்கு என்ன செய்தார்கள்...யாகம் செய்தார்கள் என்றும் மழை நீரை அணை கட்டி பாசனம் செய்தார்கள் என்றும் படிக்கிறோம்.
இன்று குளம்,குட்டை,அணை எல்லாம் என்ன ஆயின...இப்போது நதிகளை இணைப்போம் என்றால் அந்த நதிகளே மழை இன்றி வற்றினால் இத்தனை லட்ச கோடி மக்கள் பணம் இத்திட்டத்தை செல்முறை படுத்தும் கம்பெனிகளுக்கு(முக்கிய பங்கு வெளிநாட்டு கம்பெனியாக இருக்கும்) 'ஸ்வாஹா' என்று நினைக்கத் தோன்றுகிறது.
யாகம் மூலம் தேவர்களுக்கு உணவை அக்னியில் 'ஸ்வாஹா' கொடுப்பதால் மழை கிடைக்கும் என்று பகவத் கீதையில் கிருஷ்ண பகவான் கூறி உள்ளார். அவ்வாறு அக்னியில் தேவர்களுக்கு உரிய உணவை அளிக்க தவறினால் நாட்டில் வெள்ளமோ வறட்சியோ வரும் என்றும் மிகத் தெளிவாக பகவத் கீதையில் எச்சரிக்கை செய்துள்ளார்...நாம் இவற்றை எல்லாம் அறிவோமா?
அதே போன்று மாதம் யாரின் ஒழுக்கத்தால் மும்மழை பெய்யும் என்றும் கூறி உள்ளது நம் தமிழ் மொழி.
வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை நீதி மன்னர் நெறியினர்க்கோர் மழை மாதர் கற்புடை மங்கையர்க்கோர் மழை மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே.
http://www.kamakoti.org/tamil/2dk40.htm
இவற்றை எல்லாம் புரிந்து தவறுகளை சரி செய்யாமல் கோடிப் பணத்தை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தனியார் நிறுவனங்களுக்கு 'ஸ்வாஹா' செய்வதை என்ன சொல்வது?

No comments:

Post a Comment