Friday, March 18, 2016

Sekkizhar author of திருத்தொண்டர் புராணம் from Kundrathur

Kundrathur is famous for its Murugan temple and so have visited it number of times...but it was a pleasant surprise of late when I come to know that I was actually passing by Sekkizhar temple and the Sivan temple which is said to be worshiped by Sekkizhar. These also reminded me to link on the painting in Shenbagam Vinayagar Temple in Singapore...
https://picasaweb.google.com/103103855061351089314/SingaporeTemples#5251760469234502786
https://picasaweb.google.com/118015198607847485900/November272015#6263594530747100722
நம்பி சொன்னபடியே ராஜராஜ சோழன் சிதம்பரத்துக்கு ஆசை ஆசையாக ஓடினான். ஆனால் அங்கேயுள்ள நிர்வாஹஸ்தர்களான தீக்ஷிதர்களோ, மூவர் கதவை மூடி ஸீல் வைத்தார்களே தவிர அதை எப்போது திறக்கணும் என்று ஏதொன்றும் சொன்னதாகத் தெரியாததாலே, இப்போது தாங்கள் எப்படி அதைத் திறக்கப் பெர்மிஷன் தருவது என்று கேட்டார்கள். "அந்த மூவரே திரும்பி வந்தாலொழிய நாங்களாக அப்படிச் செய்ய 'அதாரிடி' இல்லையே!" என்று கை விரித்து விட்டார்கள்! சோழ ராஜாவுக்குச் சொரேலென்றாகி விட்டது. ஆனால் ஒரு நிமிஷந்தான்!சட்டென்று அவனுக்கு ஒரு யுக்தி தோன்றிற்று. அவன் மஹாவீரனும், பக்திமானும் மட்டுமில்லை;புத்திமானும். என்ன யுக்தி என்றால்: மூவர் விக்ரஹங்களுக்கு விமிரிசையாகப் புறப்பாடு செய்வித்து அந்தக் கனகஸபா மேலண்டை அறை வாசலில் கொண்டு வந்து நிறுத்தினான். தீக்ஷிதர்களிடம், "முத்ரை வைத்தவர்களே வந்துவிட்டார்கள். கதவைத் திறக்கணும்" என்று கேட்டுக்கொண்டான். வருங்காலத்திலே தேசம், லோகம் எப்படி வேணா போகட்டும். நாம 'ஐடியாலஜி'ன்னு ஏதோ ஒண்ணை ஜோடிச்சு வெச்சுண்டு, அதையே வீம்பாப் பிடிச்சுண்டு தற்போதைக்குக் கார்யமாக்கிட்டா போறும், அதிலே நமக்கு மட்டும் பிற்காலத்துக்காகவும் மூட்டை கட்டிண்டா போறும்' என்று குடியரசுகள் நடக்கும் தற்காலத்தில், பூர்வ கால முடியரசர்கள் எப்படி இருந்திருக்கிறார்களென்று பார்த்தால் ஆச்சர்யமாயிருக்கிறது! எண்ணூறு பதிகங்களையும்கூட ஒருமொத்தமாகப் பார்த்தால் எதிர்கால ஜனங்கள் ஜாஸ்தீ என்று தள்ளி விடுவார்களோ என்று ராஜா பயந்து, அதையும் பல பாகங்களாக க்ளாஸிஃபை பண்ணச் சொல்லி நம்பியாண்டார் நம்பியைக் கேட்டுக் கொண்டான். ராஜராஜசோழனுக்குப் பின்ஸந்ததியான அநபாய சோழனின் காலத்தில் அறுபத்து மூவர் சரித்திரத்தை, hagiography literature -ல் (மஹான்கள் சரித இலக்கியத்தில்) 'லோகத்திலேயே இதற்கு ஸமானமில்லை' என்று எல்லோரும் கொண்டாடும் படியாகத் 'திருத்தொண்டர் புராணம்' என்று சேக்கிழார் - அநபாயே சோழ மஹாராஜாவின் பிரதம மந்திரியா யிருந்தவர் - பாடிக் கொடுத்தார். 'பெரிய புராணம்' என்று அதைத்தான் சொல்கிறோம். அதுவே பன்னிரண்டாம் திருமுறை. அந்த அநபாயன்தான் இரண்டாவது குலோத்துங்கன் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். ஒரு பொருத்தம் என்னவென்றால் பதினோரு திருமுறைகளை வகுக்கச் செய்த ராஜராஜ சோழனுக்கு அப்பா அம்மா வைத்த பேர் - இயற்பெயர் - அருண்மொழி என்பது, பன்னிரண்டாம் திருமுறை பாடின சேக்கிழாரின் இயற்பெயரும் அருண்மொழிதான். தமிழ் மக்களை வாழ வைக்கும் அருள் மொழிகளையெல்லாம் ஒரு அருண்மொழி கண்டுபிடித்துக் கொடுத்தான். இன்னொரு அருண்மொழி அந்த அருள் மொழி அருளியவர்களின் சரித்ரங்களைப் படைத்துக் கொடுத்திருக்கிறார்.
இதற்கெல்லாம் அருளியவர் விக்நேச்வரர். தமிழ் மக்களுக்கு இஹம் - பரம் இரண்டும் கிடைப்பதற்கு அவர் செய்திருக்கிற உபகாரம் வேறு யாரும் செய்யவில்லை.
http://www.kamakoti.org/tamil/7dk26.htm

No comments:

Post a Comment