Sunday, March 27, 2016

Acharapakkam or அச்சரப்பாக்கம்

த்ரிபுராஸுரர்களை நோக்கி ஈச்வரனின் ரதம் போய்க்கொண்டிருக்கும் வழியில் அதன் அச்சு முறிந்து போகும்படியாகப் பிள்ளையார் பண்ணிவிட்டார். ரதம் நின்றுபோய்விட்டது. உடனே ஈச்வரனுக்குப் புரிந்துவிட்டது. 'ரொம்பவும் பெரியவனாகையால் நமக்குச் சட்டம் இல்லை என்று இருப்பது தப்பு. ரொம்பப் பெரியவனாயிருப்பதாலேயே நாம் தான் லோகத்துக்கெல்லாம் உதாரணமாக நடந்து காட்ட வேண்டும். அதன் படி சட்டத்துக்கு ரொம்பவும் அடங்கிப்போக வேண்டும். சட்டம் என்று வருகிறபோது அப்பா பிள்ளை முதலான உறவுகளுக்கு இடமில்லை, என்று பரமேஸ்வரன் நினைத்தார். உடனே, கொஞ்சங்கூட ஸ்தானம் பார்க்காமல் பிள்ளையாருக்குப் பூஜை பண்ணினார். (இன்னொரு ஸந்தர்ப்பத்தில் இளைய பிள்ளையிடமும் கீழ்ப்படிந்து ப்ரணவோபதேசம் வாங்கிக் கொண்டிருக்கிறார்!) பிள்ளையாரும் அப்பா கொஞ்சம் நினைத்தவுடனேயே ஒடிவந்து விக்னத்தை அகற்றிவிட்டார். அதற்கப்புறம் ரதம் ஒடி, முடிவில் 'த்ரிபுராந்தகர்' என்று பெரிய பெயர் வாங்கும்படியாக ஈச்வரன் அந்த அஸுரர்களை ஜ்யித்தார். செங்கல்பட்டுக்கும் திண்டிவனத்துக்கும் நடுவில் "அச்சரப்பாக்கம்" என்று இருக்கிறதே, அந்த ஊர்தான் ஈச்வரனுடைய ரதத்தின் அச்சு இற்றுப்போன "அச்சிறுப்பாக்கம்"என்று சொல்வார்கள். http://www.kamakoti.org/tamil/part4kural13.htm
பல நாள் செல்ல வேண்டும் என்ற எண்ணம் நேற்று இறைவன் அருளால் அச்சிறுப்பாக்கம் சென்று இறைவனை தரிசனம் பண்ண முடிந்தது. அச்சுமுறி விநாயகர் கோவில் நான் எதிர்பார்த்ததைவிட சிறிய கோவிலாக இருந்தது. விநாயகர் கோவில் அருகே எதிரில் சிவன் கோவில் உள்ளது.பெரிய இராஜ கோபுரம் உள்ள கோவில். அப்பர் மற்றும் திருஞானசம்பந்தர் இறைவனைப் பாடி இருக்கிறார்கள்.இந்த விநாயகரைப் பாடிய அருணகிரிநாதர் முருகனை 'அச்சிறு முருகன்' என்று திருப்புகழில் பாடுகிறார். பாடல் பெற்ற கோவிலை சற்று சுத்தமாக வைத்திருக்க நாம் அனைவரும் பக்தியுடன் முயல வேண்டும்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற ஒளவையாரின் வழியினை தமிழ் பேசும் உள்ளங்கள் செவி சாய்த்து கோவில்களுக்கு செல்ல ஆரம்பித்தால் திருக்கோவில்கள் சுத்தமாக இருக்கும்.

No comments:

Post a Comment