Friday, September 9, 2016
Thiruvotriyur or திருஒற்றியூர்
Visiting Thiruvotriyur in North Chennai. This temple had a unique place as many saints and sages blessed this place including Adi Sankarar, Pattinathar, Sundaramurthi Swamigal, Vallalar just to name a few...Kanchi MahaSwamigal says "திருவொற்றியூரில் பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மண்டபம் ஒன்று இருக்கிறது. அதிலே டான்ஸ் ஆடுகிற புருஷன் ஒருத்தனின் சிற்பம் இருக்கிறது. அவனுடைய ட்ரெஸ்ஸைப் பார்த்தால் ஆச்சரியமாயிருக்கிறது. இந்தக் காலத்தில் மலையாளக் கதகளிக்காரர்கள் தலையில் பெரிசாக ஒரு தினுஸுச் சும்மாடு வைத்துக் கொண்டிருக்கிறார்களே, அதே மாதிரி இவன் வைத்துக் கொண்டிருக்கிறான். கதகளிக்காரன் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் கத்தி மாதிரியே இவன் கையிலும் இருக்கிறது!
தமிழறிஞர்களிடம் இதைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டதில், கதகளிக்கு ஜன்மபூமி தமிழ் தேசந்தான் என்று எனக்குத் தீர்மானம் ஏற்பட்டிருக்கிறது. பூர்வத்தில் மலையாளம் தமிழ்நாட்டின் ஒரு பகுதியான சேரநாடாகத்தான் இருந்தது. தமிழ்நாட்டின் கதகளி பிற்காலத்தில் அங்கே மாத்திரம் தங்கிவிட்டிருக்கிறது. ‘கதகளி’ என்பது ‘கதை-களி’ என்ற இரண்டு வார்த்தைகளின் கூட்டு. கதை என்றால் கதைதான். ‘களி’ என்பது டான்ஸாகிய கூத்துக்கே தமிழில் வழங்கிய இன்னொரு பெயர். கூத்தனான நடராஜாவின் favourite நைவேத்யத்துக்கு இதனால்தான் களி, திருவாதிரைக் களி என்றே பேர் வைத்துவிட்டாற் போலிருக்கிறது! ஒன்றுக்கொன்று ஸம்பந்தமில்லாத தனிப் பாடல்களுக்கு டான்ஸ் என்றில்லாமல், ஒரே பெரிய கதையை நாட்ய த்வாரா விளக்கி ஆடுகிற dance drama என்பதே ‘கதகளி’ என்பதன் அர்த்தம்.மலையாள நம்பூதிரி வம்சத்தில் அவதரித்த ஸ்ரீ சங்கர பகவத்பாதாளுக்குத் திருவொற்றியூருடன் நெருங்கின ஸம்பந்தமுண்டு. அங்கே திரிபுரஸுந்தரிக்கு யந்திர ஸ்தாபனம் செய்திருக்கிறார். இன்றைக்கும் அம்மன் கோயில் அர்ச்சகர்களாக நம்பூதிரிகளே இருக்கிறார்கள். இப்போது மலையாளத்தில் மட்டும் தங்கிவிட்ட கதகளி ஆயிரம் வர்ஷம் முந்தி ராஜராஜன் நாளில் தமிழ் நாட்டுக்குள்ளேயே மற்ற இடங்களைவிடத் திருவொற்றியூரில் ரொம்பப் பொலிவோடு இருந்திருக்கிறது."
http://www.kamakoti.org/tamil/7dk199bi.htm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment