Friday, September 30, 2016

Teacher from Karnataka walks 10KM to teach

Here is the true face of the women of this holy land....what a grit and determination for a wonderful cause.It is such woman who should get headlines, to erase all the evils that appear as headlines.Would the media do it? It is also in the hands of teachers to produce such a generation who would put it as the headlines.
"Most of the people in this village are daily-wage labourers. I want to train and educate their children," she says. ''Walking alone exposes Sumitra to the dangers of attack by wild animals as the school is located in a thick forest, but her determination to shape the lives of children in the small village ''
http://timesofindia.indiatimes.com/city/hubballi/She-walks-10km-crosses-forest-to-teach-kids/articleshow/54040027.cms http://www.dinamalar.com/news_detail.asp?id=1601777
ஆசிரியை சுமித்ரா, தான் பணிபுரியும் பள்ளியை சென்றடைய, நாள்தோறும், 19 கி.மீ., துாரம் பயணிக்கிறார். அதில், ஒன்பது கி.மீ., வரையே வாகனத்தில் செல்ல முடியும்.மீதமுள்ள, 10 கி.மீ., பாதையில், ஐந்து கி.மீ., அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. வழியில் பல மிருகங்கள் குறுக்கிட்டாலும், அஞ்சாமல், காட்டை நடந்தபடி கடந்து செல்கிறார். காட்டை அடுத்து, ஐந்து கி.மீ., துாரம் கரடு முரடான பாதையை கடந்து சென்று, பள்ளியை அடைகிறார் சுமித்ரா.
மழைக்காலங்களில், பள்ளியை சென்றடைவது மிகவும் கடினமாக இருக்கும். இருப்பினும், அதை பொருட்படுத் தாமல், கடந்த, 11 ஆண்டுகளாக, பள்ளிக்கு சென்று பாடம் நடத்தி வருகிறார் சுமித்ரா. கூலித்தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு, கல்வி கற்பிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ள சுமித்ரா, இதுவரை, வேறு பள்ளிக்கு இடமாற்றம் கேட்டு விண்ணப்பித்ததில்லை.
Top it all she has not asked for transfer, how can she when she wants to transform the lives of the poor children?
http://www.kamakoti.org/tamil/7dk52.htm
அதனால் இக்கால ஆசிரியர்மார்களுக்கே அப்பீல் செய்து கொண்டு பார்க்கிறேன். அவர்கள்தானே தற்காலத்திலும் தங்கள் ஜீவனோபாயமாகவே கல்வியை ஏற்றுக்கொண்டிருப்பவர்கள் வேறே வேலை கிடைக்கவில்லை என்பதனால் இதற்கு வந்ததாக இல்லாமல், வருங்காலப் பிரஜைகளின் அறிவை மேம்படுத்தும் கல்வி என்ற உத்தமமான தொழில் தங்களுக்கு வாய்த்திருப்பதன் அருமையை, அருமை பெருமையை அவர்கள் உணர்ந்து ஆசிரியத் தொழிலை ஒரு ஆராதனையாக ஆற்ற வேண்டும்..இக்கால ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுக்கும்போதும் மாணவர்கள் பாடத்தை மாத்திரமின்றி, பாடம் சொல்லிக் கொடுக்கிற ஆசிரியரையும்தான் கவனிக்கிறார்கள். பாடம் அவர்கள் மனஸில் பதிகிற மாதிரிதான், அந்த ஆசிரியரின் நடத்தையும் பதிகிறது. பாடத்தைக் கவனிக்காமலும், அது மனஸில் பதியாமலும் போகிற மந்தமான மாணவனும்கூட ஆசிரியரின் நடத்தையை கவனிப்பான், அது அவன் மனஸில் பதியும். 'அப்படி மாணவர்களுக்குப் பதிவது அவர்களை நற்குண. நல்லொழுக்கங்களில் கொண்டு விடவேண்டும். அந்த ரீதியில் நாம் உத்தமமாக வாழ வேண்டும்.

No comments:

Post a Comment