Thursday, October 13, 2016

Selling Alcohol with a target sales, ruining the lives

http://www.dinamalar.com/news_detail.asp?id=1626967
நடப்பாண்டு வரிசையாக, வெள்ளி, சனி என, விடுமுறை தினங்களில் தீபாவளி வருவதாலும், ஞாயிறு அன்று விடுமுறை என்பதாலும், 500 கோடி ரூபாய்க்கு, 'சரக்கு' விற்பனை நடக்கும் என எதிர்பார்க்கிறோம்...
தெய்வ தமிழ் நாடு என்று பெருமை கொண்ட நாம் இன்று பெண் முதலமைச்சராக இருக்கும் போதும்,பல பெண்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தும் இவ்வாறு மக்களை மாக்களாக்கும் குடிப்பழக்கத்துக்கு ஆதரவு கொடுப்பது ஏனோ? பெண் விடுதலை என்று கூறி பெண்களையும் இக்குடிப்பழக்கத்துக்கு அடிமை கொண்ட கலாச்சார சீரழிவு தானோ?
63 நாயன்மார்களையும் பல தெய்வப் புலவர்களையும் ஈன்ற நாட்டின் சரித்திரத்தை மறந்தது தான் காரணமோ? வீரத்தின் விளை நிலமாய் விழுப்புண்ணை பெருமை கொண்டு பேசியதெல்லாம் எழுத்தில் தானோ? என்று நீ உன் சரித்திரம் கூறும் வீரத்தை மீட்டெடுப்பாய்?
குடிக்கத் தண்ணீர் இல்லையாம், கர்நாடகம் விவசாயத்துக்கு காவேரியை தர மாட்டார்களாம், இதெற்கெல்லாம் கவலை கொள்ள மாட்டார்களாம். ஆனால் மனதை தொலைத்து,கெடுத்து,மக்களின் அவலத்துக்கு துணை நிற்பார்களாம். இது தான் அடிமை கொண்டு ஆட்சி நடத்திய வெள்ளையர்களின் ஜனநாயகம் என்ற பரிசு...மன்னார் ஆட்சியில் இவ்வாறு கொடுமை நடந்துள்ளதா? நம் நாட்டு மன்னர்கள் மாறு வேடம் போட்டு தம் மக்களின் குறை அறிந்து அக்குறைகளை மறு நாளே தீர்த்து வைத்தார்கள் என்று படித்ததை மறந்தோமோ?
உன்னை தண்ணியில் மிதக்க வைத்து பின் உன்னை தண்ணீரில் மிதக்க வைக்கும் இந்த மக்கள் ஆட்சியை மாக்கள் ஆட்சி என்று சொன்னால் தவறோ?
http://www.thehindu.com/news/national/tamil-nadu/sc-declines-to-interfere-with-sale-of-liquor-by-state/article3999624.ece கொடுமையிலும் கொடுமை என்பதா?அல்லது இவர்களின் வேலையை காப்பாற்றுகிறார்களா?குடித்தால் குற்றம் பெருகும் அதனால் இவர்களுக்கு வேலை நிரந்தரம்....வாழ்க வெள்ளைக்காரனின் ஜனநாயகம். விழுப்புண் பார்த்த மன்னர்கள் எல்லாம் மண்ணுக்குள்ளே, அவர்கள் சிந்திய இரத்தத்தில் இருந்து புதியதோர் வீரர்கள் முளைக்க வேண்டும்....

No comments:

Post a Comment