Monday, April 18, 2016

கோவிலுக்கு கோ தானம் செய்யலாமே!!!

கோவிலுக்கு கோ தானம் செய்யலாமே!!! தெய்வத்தமிழ்நாடு என்றும் வேதம் நிறைந்த தமிழ் நாடு என்றும் அழைக்கப்படும் நம் நாட்டிலே கோவில்கள் பல இருக்கின்றன. ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று தமிழ் பாட்டி ஔவையார் கூறி உள்ளார்.கோவில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் என்கிறது தமிழ் பழமொழி. இவ்வாறு கோவில் வழி பாட்டுக்கு முக்கியம் கொடுத்த தமிழ் மக்கள் இன்று கோவில்களை எவ்வாறு வைத்திருக்கிறோம் என்று பார்க்க வேண்டும். சில நகர்புற கோவில்களில் பசுக்கள் பராமரிப்பு மிக சிறப்பாக நடை பெற்று வருகிறதாகவும்...வேறு சில ஊர்க் கோவில்களில் அர்ச்சகர் தீபம் ஏற்றுவதற்கே சிரமப் படுவதுமாக இருக்கிறது. இந்த நிலையை மாற்ற கோவில்களுக்கு தனியாகவோ பலர் கூடியோ கோ தானம் செய்யலாமே!!! இக்கைங்கர்யத்தில் நிறுவனங்களும் சேர்ந்து கோவில்களுக்கு கோ தானம் செய்வதன் முலம், கோவில்களுக்கு பால், தயிர், நெய் மற்றும் சாணம் உரமாக கோவில் தோட்டத்தில் உள்ள மரங்களுக்கு உபயோகிக்கலாம். இதனால் சிலபேருக்கு வேலை வாய்ப்பையும் அளிக்க முடியும். இந்த சிந்தனையை ஆன்மிக ஊடகங்கள் இறை சிந்தை உள்ள அடியார்களுக்கு எடுத்து சொல்ல மீண்டும் மீண்டும் முன்வர வேண்டும்.அன்பர்கள் அடியார்கள் இதை செய்ய இறைவன் அருள வேண்டும்.

1 comment:

  1. The previous generation grew up in villages and hence as children grew up with cows not only in temples but also at home. They also maintained good health with cows milk and all Komadaha items. we are deprived of this because of town brought but hope to worship the cows in Goshalai and temples. Great idea.

    ReplyDelete