Friday, April 15, 2016

பாடல் பெற்ற கோவில்களில் தீபத்தை எரிய வைப்போமே!!!

63 நாயன்மார்கள் வாழ்ந்த தெய்வத் தமிழ் நாட்டிலே இன்று கோவில்களை எவ்வாறு பராமரிக்கிறோம் என்று பார்த்தால் சில கோவில்களில் சிறப்பான வழிபாடுகளும் வேறு சில கோவில்களில் தீபம் கூட எரியாமல் இருக்கும் நிலையை பார்க்க முடிகிறது. மன்னர் ஆட்சி காலத்தில் கட்டிய மாடக்கொவில்கள் இன்று மக்களாட்சி என்று சொல்லப்படும் காலத்தில் பாடல் பெற்ற கொவில்களிலாவது தீபம் ஏற்றுவது என்று நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும். ஆன்மிக அன்பர்கள் மற்றும் ஆன்மிக ஊடகங்கள் இவற்றை முன்நிறுத்தி செயல்பட உறுதி எடுக்க வேண்டும். ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்,சக்தி விகடன்,குமுதம் பக்தி, ஆலய தரிசனம், கலைமகள்,அமுதசுரபி மற்றும் பல இதழ்கள் இந்த திட்டத்தை ஆன்மிக அன்பர்களுக்கு எடுத்து சொல்லி செயல் பட ஒரு டிரஸ்ட் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். கோவில்களைப் பற்றி எழுதி பக்தி பெருக்குவது ஓன்று, அக்கோவில்களில் தீபம் ஏற்ற வழி செய்வது அடுத்த படி.நாம் இப்போது ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து ஒவ்வொரு பாடல் பெற்ற கோவில்களிலும் தொடர்ந்து தீபம் எரிய ஏற்பாடு செய்யலாமே!!!இறைவனே அதற்கு அருள வேண்டும்!!!
Please see below one of Sambandhar Padal petra sthalam....
https://picasaweb.google.com/118015198607847485900/MyiladuthuraiAndNearbyTemples#6269588194659452754

No comments:

Post a Comment