Monday, October 16, 2017
எங்கே செல்கிறது தமிழகம்
எத்தனை பாரதி வரவேணும் தமிழகத்தை சீரமைக்க. நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்...
குடி குடியைக் கெடுக்கும் என்று எழுதியும், அந்த குடியை வியாபாரமாக பார்க்கும் குடியாட்சி...உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, உறங்க வீடின்றி தவியாய் தவிக்கும் தமிழர்களை பார்க்க நெஞ்சு பொறுக்குதில்லையே. ஆனால் இங்கே மக்கள் ஆட்சி என்றும் குடியாட்சி என்றும் சொல்லி 500 கோடிக்கு உடலை கெடுக்கும், உறவைக் கெடுக்கும் குடி வியாபாரத்துக்கு அரசு தயார் ஆகிறது.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1876919
எங்கே செல்கிறது தமிழகம்..."வார விடுமுறையில், மது விற்பனை, 100 கோடி ரூபாயை தாண்டும்.
இதை விட, ஆங்கில புத்தாண்டு, பொங்கல் போன்ற நாட்களில் விற்பனை எகிறும்.இந்நிலையில், நாளை தீபாவளி கொண்டாடப்படுவதால், 500 கோடி ரூபாய்க்கு, மதுபானங்கள் விற்பனையாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது."
இந்தக் கோடிகளை மக்கள் மக்களுக்காக நல்ல வீடுகள் கட்டி வீடில்லாதவர்களுக்கு அவற்றைக் கொடுக்கலாமே..இந்த சிந்தனை மக்களுக்கும் அரசுக்கும் வருமா? ஊடகங்கள் இந்த சிந்தனையை மக்களுக்கும் அரசுக்கும் எடுத்து சொல்வார்களா?
தெய்வத் தமிழ் நாட்டிலே 63 நாயன்மார்கள் வாழ்ந்தார்கள் என்றும், சேர, சோழ, பாண்டிய பல்லவ மன்னர்கள் ஆட்சி புரிந்தார்கள் என்றும், மநு நீதி சோழன், கண்ணகி போன்றவர்கள் வாழ்ந்தார்கள் என்றும் படித்தோம்...அவற்றை எல்லாம் மறந்து இன்று ஏன் இந்த நிலை?எங்கே செல்கிறது தமிழகம்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment