Tuesday, October 3, 2017

சலங்கை பூஜை மேடை அலங்காரம்

கோவில்களை சுத்தம் செய்ய வேண்டும்....
சாமி சிலைகளை அலங்கரிக்க வேண்டும்.....
கோவில் வாசல்களுக்கு தோரணம் வேண்டும்....
இங்கே மேடைகளை அலங்கரித்து மகிழ்கிறார்கள்...
சலங்கை பூஜை என்றும் மற்றும் பல பெயர்களில் நடன நிகழ்ச்சிகளில் மேடை அலங்காரம் என்னை இவ்வாறு சிந்திக்க தூண்டியது.
தெய்வத்தின் குரல் இதோ
http://www.kamakoti.org/tamil/3dk244.htm
தேவதாஸி ஒழிப்பு ஒரு பக்கம் பண்ணிக் கொண்டு, இன்னொரு பக்கம் கலை அபிவிருத்தி என்று குல ஸ்த்ரீகளையெல்லாம் மேடைக்கு ஏற்றி டான்ஸ் பண்ண வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெரிய மநுஷ்யர்கள் வீட்டுப் பெண் குழந்தைகளுக்கு அக்ஷராப்யாஸம் மாதிரி பரத நாட்டிய அப்யாஸமும் ஏற்பட்டு விட்டது. ஸ்திரீ ரூபத்திலே ஒரு ஸதஸிலே மேடை ஏறி, ஆடை அலங்காரங்களோடு நவரஸங்களைக் காட்டி ஆடுகிறதென்றால் அதனால் ஸாதாரண மநுஷ்யர்கள் இருக்கிற ஸ்திதியில்……. நான் சொல்ல வேண்டாம். ‘நமக்கு ரூபமிருக்கிறது, ஆடத் தெரிகிறது. ஸபையை வசீகரித்து அப்ளாஸ் வாங்க முடிகிறது என்றால் அப்புறம் ‘ஏன் ஸினிமாவில் சேர்ந்து இன்னம் ஜாஸ்தி புகழ் வாங்கக் கூடாது?’ என்று ஆசை உண்டாகிறது. குல ஸ்திரீகளுக்கு இப்படிப்பட்ட எண்ணங்கள் உண்டாகிப் பல பேரோடு நடிப்பது, ஜனரஞ்ஜகம் என்பதற்காக இறங்கிக் கொண்டே போவது என்றெல்லாம் ஆகின்றன. கலையை வளர்க்க வேண்டியதுதான். அதற்காக அதைவிட இந்த தேசப் பெருமைக்கு மூச்சாக இருக்கிற ஸ்த்ரீ தர்மத்தைப் பலி கொடுக்க வேண்டியதில்லை. இதையெல்லாம் யோசிக்காமல் ஸமூஹ சீர்திருத்தம், கலை வளர்ச்சி என்று செய்கிற கார்யங்கள் தேவதாஸிகள் என்று ஒரு ஜாதி மட்டும் தனியாயிருப்பானேன் என்று ……. இப்போது எல்லாவற்றையும் ‘டெமாக்ரடைஸ்’ பண்ணிப் பார்ப்பதாகத் தானே இருக்கிறது? இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது. எல்லாக் கலைகளையும், தொழில்களையும் ஒழுங்காக வளர்ப்பதற்குத்தான் வர்ண வியவஸ்தை, ஜாதி வியவஸ்தை ஏற்படுத்தப்பட்டது. ஏதாவது ஒரு ஜாதியில் வியவஸ்தை கெட்டிருந்தாலும் அதைச் சீர்படுத்தி அதற்கான தொழிலை அதனிடமே விட்டு வைப்பதுதான் பொது தர்மம் கெடமாலிருப்பதற்கு வழி.

No comments:

Post a Comment