Monday, July 18, 2016

இன்று கண்ணகி இருந்தால்

தலைவிரி கோலம் கூடாது.... நர்சிங் மாணவிகளுக்கு எச்சரிக்கை
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/for-nursing-students-rules-regulations-235355.html
அப்போ ஆசிரியைகள்?
சில நாட்களுக்கு முன் தென் தமிழகத்தில் ஒரு பள்ளி மாணவி தலை விரி கோலமாக சென்று கொண்டிருப்பதைப் பார்த்த ஒரு கிராமத்துப் பெண் அம்மாணவியிடம் ஏன் இவ்வாறு பள்ளி செல்கிறாய் என்று கேட்டார்....அந்த மாணவி எதோ சொல்லி பள்ளிக்குச் சென்று முடிந்து கொள்வேன் என்று கூறி சென்று விட்டாள். அந்தப் பெண்ணிடம்,'நான் ஒரு பள்ளி ஆசிரியர் என்னுடன் வேலை செய்யும் சில ஆசிரியைகள் இவ்வாறு தலைவிரி கோலத்துடன் பள்ளி வருகிறார்கள்', என்று நாணம் இல்லா 'நாகரீகம் என்று' நாளைய தலைமுறைக்கு நாணமில்லாமல் வழி காட்டும் ஆசிரியைகளின் நிலையை கூறினேன்.
பாடம் : 43 (கனவில்) தலைவிரி கோலத்தில் பெண்ணைக் காண்பது 7040. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' தலைவிரி கோலத்துடன் கறுப்பு நிறப்பெண்ணொருத்தி மதீனாவிலிருந்து வெளியேறி அங்கிருந்து 'மஹ்யஆ' சென்று தங்குவதைப் போன்று நான் (கனவு) கண்டேன். மதீனாவின் பெருநோய்கள் மஹ்யஆவுக்கு இடம் பெயரச் செய்யப்பட்டுவிட்டது என்று நான் (அதற்கு) விளக்கம் கண்டேன். 'மஹ்யஆ' என்பது 'அல்ஜுஹ்ஃபா' எனும் இடமாகும். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
http://www.tamililquran.com/bukharidisp.php?start=7028
கண்ணகி தன் தலைவனை இழந்து தலைவிரி கூந்தலுடன் பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டாள்...தன் கற்பின் சிறப்பால் பாண்டிய மன்னனுக்கும் நாட்டிற்கும் தண்டனை கொடுத்தாள்...இன்று தலைவிரி கோலத்துடன் திரியும் பெண்களுக்கு என்ன இருக்கோ தெரியவில்லை ஆனால் இவர்களுக்கு நல்ல ஒரு வாழ்க்கை துணை இருக்கா என்பது தான் கேள்வி? இருந்தால் கணவனை இழந்தவள் போலவா தலைவிரி கோலத்துடன் அலைவார்கள்? இன்று கண்ணகி இருந்தால் முதலில் இவ்வாறு அமங்கலமாக செல்லும் பெண்களைத்தான் முதலில் தன் கற்பின் சிறப்பால் தண்டணை கொடுத்திருப்பாள் அல்லது இப்பெண்களின் கணவன்மார்களுக்கு தண்டணை கொடுத்திருப்பாள் என்று தோன்றுகிறது.

No comments:

Post a Comment