Tuesday, December 29, 2015
நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்
http://timesofindia.indiatimes.com/india/Smoking-dips-10-in-2-years-in-India-but-women-smokers-up-sharply/articleshow/50347209.cms
Cigarette consumption in India is falling steadily even as the number of women smokers is rising, making it home to the second largest number of female smokers after the United States.
http://timesofindia.indiatimes.com/india/Tamil-Nadu-teachers-told-to-mind-their-blouses/articleshow/5345859.cms
Teachers in government schools are unhappy over a recent circular sent by the school education department asking chief and district education officers to instruct teachers to ''dress decently". However, officials say that a dress code for teachers only makes them more dignified and respected.
Wonder why only Govt. School teachers? Why not all? Is it that difficult to know what is decent and not? Then it only shows how we have failed in NOT LISTENING TO THE WORDS OF DEIVATHIN KURAL.
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்
http://www.tamilvu.org/courses/hg200/hg205/html/hg205sso.htm
ஒரு பால்ய விதவை உண்டானால்கூட களங்கம் என்று சீர்திருத்தக்காரர் சொன்னால், ஒரே ஒரு பெண் கெட்டுப் போனால்கூட அதைவிட ஆயிரம் மடங்கு களங்கம் என்று நான் பயப்படுகிறேன்.
வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை
நீதி மன்னர் நெறியினர்க்கோர் மழை
மாதர் கற்புடை மங்கைக்கோர் மழை
மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே.
'இவர்கள் சீர்திருத்தம் என்கிற பெயரில் நம் பெண்களின் மகத்தான குலதனமான கற்புக்கு ஹானி உண்டாகும்படியான ஹேதுக்களை ஏற்படுத்துகிறார்களே' என்று அதைவிடக் கோபம் வருகிறது; அழுகை வருகிறது. 'ஸ்திரீகள் கெட்டுப் போனால் குலக்ஷயம்தான்; லோகமே போய் விடும்; எல்லாரும் நரகத்துக்குப் போகவேண்டியதுதான்: 'ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ண ஸங்கர:| ஸங்கரோ நரகாயைவ*' என்று அர்ஜுனனுக்கு அழுகை வந்த மாதிரி வருகிறது.
இக்காலப் பெண்களும் இதற்கு ஸம்மதித்திருக்கிறார்களே, பெற்றவர்களும் அங்கீகரித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே என்பதுதான் மனஸைச் சுடுகிறது.
பால்ய விவாஹம் பௌதிகமாகக் கெடுதல் என்பது வெறும் பேச்சு. குழந்தையாகக் கல்யாணம் பண்ணிக் கொண்டாலும் அப்புறம் அவள் சரீர ரீதியில் பக்குவமான பிறகுதான் தாம்பத்தியம் பண்ண அழைத்துக் கொள்ளப்படுவாள். அதுவும் தவிர தர்ச பூர்ணம் (அமாவாஸ்யை, பௌர்ணமி) போன்ற அநேக தினங்களில் பிரம்மசரிய நியமம் சொல்லியிருப்பதால் சரீரம், சித்தம் இரண்டுமே புஷ்டியோடு இருக்கும். இப்போதுதான் இந்தக் கட்டுப்பாடுகள் போய், சித்தவிகாரம், தேக பலஹீனம் இரண்டும் அதிகமாகி நரம்பு ஸம்பந்தமான டாக்டர்கள் நன்றாக விருத்தியாகும்படி ஆகியிருக்கிறது!
http://www.kamakoti.org/tamil/2dk40.htm
ஒன்றொன்றும் இயற்கைப்படி, ஸமூஹத்தின் மொத்த வாழ்வுக்கு அநுகூலமாக எப்படியிருக்க வேண்டுமோ அப்படியிருப்பது தான் அதற்கு நிறைவு. அதிலேதான் அதற்கு நிஜமான ஸெளக்கியம் உண்டு. இந்த நிறைவை விட்டு விட்டு, செயற்கையாக ஸமத்வம் என்று ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு அதற்காக ஓடுவதில் individual ஆகவும் [தனி நபரளவிலும்] நிஜமான நிறைவு அவரவர்க்கு உண்டாவதில்லை; குடும்பம், ஸமூஹம் இவற்றின் வாழ்க்கையும் இதனால் கெட்டே போகிறது.
ஆபீஸுக்குப் போவதால் எத்தனை தப்புக்களுக்கு இடம் கொடுத்துப் போகிறது? 'பெண் விடுதலை' என்று பெரியதாகச் சொன்னாலும் ஆபீஸில் எத்தனை பேருக்கு அடங்கிப் பதில் சொல்லும்படி இருக்கிறது? இப்படி- யிருப்பதில் வாழ்க்கையில்தான் நிம்மதி உண்டா? நிம்மதியாகச் சமைத்துப் போட்டுச் சாப்பிடுவது; குழந்தை குட்டிகளின் வாத்ஸல்யத்தை பூர்ணமாக அநுபவிப்பது என்பதெல்லாம் இந்த 'விடுதலை' யில் உண்டா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment