Tuesday, July 18, 2017
ஆலயத்தைக் கேந்திரமாக வைத்தே - கல்வி, கலாசாரங்களும் வளர்ந்தன
ஆலயங்களையும் ஆண்டவனையும் இப்போது பள்ளி,கல்லூரிக் கல்வியில் தேட வேண்டி இருக்கிறது. மத சார்பற்ற கல்வியின் பயனா எல்லா மதங்களையும் கல்வி சாலையில் இருந்து துரத்தி விட்டோம். இதன் விபரீத பலனை தான் நாம் மாணவர்களின் நடத்தையிலும் மக்களின் போக்கிலும் நன்றாகவே பார்க்க முடிகின்றது.
இப்போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் செல்வோம்.நம் முன்னோர்களின் வாழ்வில் கல்வி, கலை, ஆண்டவன், ஆலயம், இசை, பண்பாடு இவை எல்லாம் எவ்வாறு சிறப்புற்று விளங்கின என்பதை பார்ப்போம்...அதன் காரணத்தையும் திறந்த மனத்துடன் சற்று சிந்திப்போம்.
http://www.kamakoti.org/tamil/part4kural171.htm
ஏறக்குறைய ஆயிரம் வருஷத்துக்கு முந்தி பல்லவ பாண்டியர்களுக்கு மேலாகப் பிற்காலச் சோழர்கள் எனப்படுபவர்களின் ஆதிக்கம் பரவிற்று. விஜயாலயன் என்பவன் இப்படி மறுபடி சோழர்களுக்குப் புது எழுச்சி தந்த பிற்பாடுதான் பராந்தகன், ராஜராஜன், ராஜேந்திரன் முதலானோர் அவன் வம்சத்திலே வந்து சோழ ஸாம்ராஜ்யத்தைப் பரப்பினார்கள். ஸாம்ராஜ்யம் என்று நீள அகலங்களில் அது பெருகியதைவிட அதிலே கலாசாரம் அதி உன்னதமாகப் பரவியதுதான் அதிகப் பெருமை. பல்லவர் காலத்தில் சிறிய அளவிலும், நடுத்தர அளவிலும் மட்டுமே கட்டப்பட்ட ஆலயங்கள் பெரிய அளவில் விஸ்தாரமாக்கப்பட்டது இந்தப் பீரியடில்தான். இதே ஸமயத்தில் கல்வி - கேள்வி, ஸாஹித்யம், ஸங்கீதம், நர்த்தனம் எல்லாமும் வ்ருத்தியாயின. இதிலே அழகு என்னவென்றால் ஆலயம் பாட்டுக்கு ஒரு பக்கத்தில் வ்ருத்தியாச்சு, கலாசாரம் இன்னொரு பக்கத்தில் அதுபாட்டுக்கு வ்ருத்தியாச்சு, என்றில்லாமல் ஆண்டவனை மையமாக வைத்தே - ஸ்தூலமாக ஆலயத்தைக் கேந்திரமாக வைத்தே - கல்வி, கலாசாரங்களும் வளர்ந்தன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment