Sunday, March 5, 2017

Sankaracharyas on Women Education and working

Two Sankaracharyas who have lived as contemporaries and both of whom shared names and even appearances and thoughts are similar...They both were called Jagatgurus, are we listening?
இப்பொழுது ஸ்திரீகளுக்கு புதுப் படிப்பு ஏற்பட்டது.வெளியில் புறப்பட்டு விட்டார்கள்.உத்தியோகத்திற்கு புருஷர்களுடன் போட்டி போடுகிறார்கள்.இதனால் ஸ்திரீகளிடத்தில் குடும்ப தர்மசாரம் இல்லாமல் கெடுகிறது.இந்தப் படிப்பு வேண்டவே வேண்டாம்.இந்தப் பெண் படிப்பு முறையை உங்களால் எவ்வளவு தூரம் நிறுத்த முடியுமோ, அவ்வளவு தூரம் நிறுத்தப் பாடுபடுங்கள். பெண்டுகளை இளம் பருவத்தில் தகப்பனாரும்,யெளவன பருவத்தில் பர்தாவும், முதிர்ந்த வயதில் புத்திரனும்,ரக்ஷிக்கிறார்கள்.அவர்களுக்கு ஸ்வாதந்திரியம் உசிதமில்லை.
வேதம் ஓதிய வேதியர்க் கோர் மழை
நீதி மன்னர் நெறியினர்க் கோர் மழை
மாதர் கற்புடை மங்கயர்க் கோர் மழை
மாதம் மூன்று மழை எனப் பெய்யுமே
என்று சொல்லியிருக்கிறது. மாதம் மும்மாரி பெய்தால்தான் எப்போதும் பூமி குளிர்ந்து, பயிர் பச்சை ஸம்ருத்தி (வளம்) இருக்கும். பிராமணர் முறைப்படி வேத அத்யயனம் பண்ணினால் அதற்காக மாஸம் ஒரு மழையும், ராஜா நீதி தவறாமல் ராஜ்யபாரம் பண்ணினால் அதற்காக ஒன்றும், ஸ்திரீகள் பதிவ்ரதா தர்மம் தப்பாமலிருந்தால் அதற்காக ஒன்றுமாக, இப்படி மும்மாரி பொழிகிறது என்று சொல்லியிருக்கிறது.
இப்போது ஸ்தீரீ தர்மத்துக்கு விரோதமான பல போக்குகள் வந்துவிட்டதால், "குரு" பட்டம் சூட்டிக்கொண்டிருக்கிற நான்தான் அந்தத் தப்புக்களை எடுத்துச் சொல்லிப் பெண்களுடைய நடத்தைக்குக் கெடுதல் வராமல் எச்சரிக்க வேண்டியிருக்கிறது. பால்ய விவாஹ காலத்தில் பெண்கள் தப்பிப் போவதற்கு ரொம்பவும் குறைச்சலாகதான் chance இருந்தது. ஒரு பெண்ணுக்குத் தாம்பத்ய எண்ணம் வருகிறபோதே அவளுக்குப் பதி என்ற ஒருத்தன் இருந்துவிட்டதால், அவனிடம் மட்டுமே அவளுடைய மனஸ் போயிற்று. இந்த எண்ணம் ஏற்பட்ட வயஸுக்கப்புறமும் கலியாணமாகாமல் இருப்பது என்று ஏற்பட்டால், அப்போது மனஸ் பல தினுஸாகப் போகிறது; சித்த விகாரம் ஏற்படுகிறது. ஆனால் இப்படி சாரதாச் சட்டத்திலிருந்து ராஜாங்க ரீதியாகவே ஏற்பட்டு விட்டதால், எங்கள் கையைக் கட்டி போட்டுவிட்ட மாதிரிதான் ஆகிவிட்டது. ஆனாலும் நினைத்து நினைத்து எத்தனையோ சட்டங்களை மாற்றுகிற மாதிரி, இதையும் மாற்றுவதற்கு அவர்களை (ஸர்க்காரை)த் தூண்டிவிடுகிற ரீதியில் public opinion-‍ஐ create பண்ண [வெகு ஜன அபிப்ராயத்தை உண்டு பண்ணி] முடியுமா என்பதால்தான், இந்த விஷயத்தில் நான் முழுக்கக் கை கழுவாமல் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆனால் பெண்களுடைய மனோபாவம், பெண்ணைப் பெற்றவர்களுடைய மனோபாவம் எல்லாமே இப்போது விபரீதமாக மாறி, கல்யாணத்துக்கு முயற்சி பண்ணாமல் காலேஜில் co-education முறையில் [ஆண் மாணவர்களோடு கூட்டுப் படிப்பு] படிப்பது, அப்புறம் புருஷர்களோடு உத்யோகம் பண்ணுவது என்றெல்லாம் ஆகி வருகிறதைப் பார்க்கிற போது, உள்ளுக்குள்ளே ரத்தக் கண்ணீர் விட்டுக் கொள்வதைத் தவிர, ஏதாவது பண்ணமுடியுமா என்று நம்பிக்கை போய்க் கொண்டுதான் இருக்கிறது.
http://www.kamakoti.org/tamil/Kural55N1.htm

No comments:

Post a Comment