Friday, November 24, 2017

Will elderly couple seek apology and learn lesson from little girl?

As someone working with value education with children and young ones...I have always felt bad looking at the indulgences shown in TV ads...
If companies are making money in any ways...should the popular elderly couple loose their sense of values and ethics? I begin to relate to the example I share with many students while interact with those young ones...about Mother Teresa and the young boy who saved sugar to share with the poor children without sugar. Here the companies are targeting the elderly couples...to INDULGE with the money when the situation for the poor remains the same...with millions in the country struggling for food, clothes and a place to sleep. Felt that elderly couple can immediately seek apology for appearing in such INDULGING sense of money, instead for helping the poor....Will their consciousness allow?
In contrast, appealing to an older age-group willing to pay more is definitely a more attractive one. The Vodafone campaign will likely appeal most to upper-middle class households in urban areas
http://www.hindustantimes.com/columns/using-older-models-by-vodafone-is-really-smart-advertising/story-Y6FeH7Ahr5XyAXUoMmcLKJ.html
I never forget a little child who taught me a very beautiful lesson. They heard in Calcutta, the children, that Mother Teresa had no sugar for her children, and this little one, Hindu boy four years old, he went home and he told his parents: I will not eat sugar for three days, I will give my sugar to Mother Teresa.
https://www.nobelprize.org/nobel_prizes/peace/laureates/1979/teresa-acceptance_en.html
Please listen to these children if still the hearts are not expanded for those who need...shall we stop this English idea of indulgence through English company and instead help the poor?
https://drive.google.com/open?id=1nCUQxOrdtk175j9QyRjtgSq4DvoC6T-H
தனி ஓர் மனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி இன்றோ ஜகத்தில் உள்ளவர்கள் எல்லாரும் அழிந்தாலும் தப்பில்ல என்னோட சந்தோஷம் மட்டும் தான் முக்கியம்...people are carried on in these lines...I used to say, when I was young parents would NEVER allow children eating on the roadside...that was how elders in the family lived and showed values...I add in the class, now in the same locality of Mylapore, I see the elderly grandmas and grandpas INDULGING by eating in the roadside..who will guide our young children in values now?
Traditional values in every sense in India is under attack...Sad the Traditional elderly couple known for Traditional dance from India plays such anti-traditional roles in not only the message but even in costumes and all...Can anyone imagine MS Subbulakshmi playing such advt? NEVER.
There is another English company for chocolates again showing anti traditional roles of mother in law and daughter in law dancing on the road after having the chocolate...Perfect examples as how The English wants us to loose our traditional values through such advt. Wish elderly couple seek apology if they can understand the agenda of companies not just for economics but also for ethics and values...

Sunday, November 12, 2017

Sonia’s blouses carry a message - Journalism at its lowest depth

http://www.theweek.in/theweek/cover/a-metaphor-and-a-medium.html
And her blouses haven’t changed in style. The cut is exactly the same as her mother-in-law’s—staidly conventional.
However, if the Gandhi saris served as a metaphor for India’s diversity, possibly Sonia’s blouses carry a message, too. They tell us that the Congress lives too much in the past; they hint it should move on and change.
These lines coming from female shows the pathetic and pungent state of writing and journalism in the current times.
Guess if the same lines were written by a male, women might say, males eyes are voyeuristic...demanding to uncover, a staidly conventional blouses to please such eyes...but now guess its 'progressive' when it appears under woman name.
I am reminded of Jagatguru Sringeri Aracharya's words here...below for readers..We failed in listening to such words of Acharyas and the result such writings in media...

Wednesday, November 1, 2017

இப்போ ஹார்வர்ட் தமிழ்க்கு 40 கோடி

http://www.dinamalar.com/news_detail.asp?id=1885900
ஆக மொத்தத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகள் பிரிவை Oxford/Cambridge Press க்கு கொடுத்துட்டாங்க...பிரிட்டிஷ் கவுன்சில்க்கு தமிழ் நாடு அரசு பள்ளி ஆசிரியர்கள் பயிற்சி குத்தகைக்கு...இப்போ ஹார்வர்ட் தமிழ்க்கு 40 கோடி...அத்தனை பணமும் நம் ஏழை சிறார்களுக்கு இல்லை? அது மட்டும் இல்லை, நம்மவர்களுக்கு தமிழை,ஹிந்தியை, சமஸ்கிரத்தை வெறுக்கவும் அல்லவா கற்பிக்கிறார்கள்.

Sunday, October 22, 2017

உணவு, உடை,உறக்கம்

மனிதனுக்குத் தேவையான உணவு, உடை,உறக்கம்(வீடு) இந்த மூன்றையும் அனைத்து மக்களுக்கும் கொடுத்து விட்டு ஸ்மார்ட் கிளாஸ், புல்லட் train , இலவச laptop கொடுங்க நல்லது...உணவு, உடை,உறக்கம்(வீடு) இதெல்லாம் இல்லாமல் ஸ்மார்ட் கிளாஸ், புல்லட் train , இலவச laptop கொடுப்பதெல்லாம், foreign companyக்கு (அப்போ East India, இப்போ MNCs)கப்பம் கட்டும் கைதிகளின் கொக்கரிப்புதான்...busல டிவி என்னு சில வருடங்கள் முன்னால் வைத்தார்கள்(தமிழன் பேருந்தில் போகும் போதுகூட சுயமா சிந்தித்து விடக்கூடாது என்பதில் எவ்வளவு கவனம்)....இப்போ என்னாச்சுன்னு பாருங்கள்.
இதுல எத்தனை கோடி செலவு?யாருக்கு இதில் லாபம்?

Monday, October 16, 2017

எங்கே செல்கிறது தமிழகம்

எத்தனை பாரதி வரவேணும் தமிழகத்தை சீரமைக்க. நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்... குடி குடியைக் கெடுக்கும் என்று எழுதியும், அந்த குடியை வியாபாரமாக பார்க்கும் குடியாட்சி...உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, உறங்க வீடின்றி தவியாய் தவிக்கும் தமிழர்களை பார்க்க நெஞ்சு பொறுக்குதில்லையே. ஆனால் இங்கே மக்கள் ஆட்சி என்றும் குடியாட்சி என்றும் சொல்லி 500 கோடிக்கு உடலை கெடுக்கும், உறவைக் கெடுக்கும் குடி வியாபாரத்துக்கு அரசு தயார் ஆகிறது. http://www.dinamalar.com/news_detail.asp?id=1876919 எங்கே செல்கிறது தமிழகம்..."வார விடுமுறையில், மது விற்பனை, 100 கோடி ரூபாயை தாண்டும். இதை விட, ஆங்கில புத்தாண்டு, பொங்கல் போன்ற நாட்களில் விற்பனை எகிறும்.இந்நிலையில், நாளை தீபாவளி கொண்டாடப்படுவதால், 500 கோடி ரூபாய்க்கு, மதுபானங்கள் விற்பனையாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது." இந்தக் கோடிகளை மக்கள் மக்களுக்காக நல்ல வீடுகள் கட்டி வீடில்லாதவர்களுக்கு அவற்றைக் கொடுக்கலாமே..இந்த சிந்தனை மக்களுக்கும் அரசுக்கும் வருமா? ஊடகங்கள் இந்த சிந்தனையை மக்களுக்கும் அரசுக்கும் எடுத்து சொல்வார்களா? தெய்வத் தமிழ் நாட்டிலே 63 நாயன்மார்கள் வாழ்ந்தார்கள் என்றும், சேர, சோழ, பாண்டிய பல்லவ மன்னர்கள் ஆட்சி புரிந்தார்கள் என்றும், மநு நீதி சோழன், கண்ணகி போன்றவர்கள் வாழ்ந்தார்கள் என்றும் படித்தோம்...அவற்றை எல்லாம் மறந்து இன்று ஏன் இந்த நிலை?எங்கே செல்கிறது தமிழகம்?

Sunday, October 15, 2017

Caste gives security to Hindus

While criticizing caste as bad, we never forget to say, its contradiction,"Work is Worship". This is exactly the idea behind Caste, receive the same old work from father and do it as worship to God and realize God...humbly.
“நாய்க்குக் கெட்ட பெயர் சூட்டித் தூக்கில் போடு” (Give the dog a bad name and hang it) என்று ஆங்கிலத்தில் ஒரு வசனம் சொல்வார்கள். நாய் நன்றியறிதலும் விசுவாசமும் உள்ள பிராணி. அதைத் தூக்கில் போடுவதை யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அதனால் அதற்கு ஒரு கெட்ட பெயரைக் கொடுத்துவிட்டு, எவனோ தூக்கில் போட்டான் போலிருக்கிறது!
நவீன நாகரிக சீர்திருத்தக்காரர்கள் நமது தர்ம சாஸ்திரங்களின் விஷயத்தில் இதையேதான் செய்கிறார்கள். யுகாந்திரமாக, இந்தத் தேசத்துக்குப் பரம க்ஷேமத்தைச் செய்துவந்த அந்த தர்மங்களால் ஏதேதோ கொடுமைகள் நேர்ந்ததாகச் சொல்லி, கெட்ட பெயரை உண்டாக்கி, அவற்றைத் தூக்கில் போடப் பார்க்கிறார்கள். நம் சனாதன சாஸ்திரங்கள் வரையறை செய்து தந்த சமூகப் பாகுபாடு (வர்ண தர்மம்) கூடாது என்று சிலருக்குத் தோன்றுகிறது.
http://www.kamakoti.org/tamil/part1kural47.htm Everyone appreciates Chanakya...Do we know what he said about Caste? Read on..
Its no strange...Under Religious Education, children in Sweden are learning the same...That Caste A Security to Hindus...
வேதமறிந்தவன் பார்ப்பான்
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்
நீதிநிலை தவறாமல் – தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்
பண்டங்கள் விற்பவன் செட்டி – பிறர்
பட்டினி தீர்ப்பவன் செட்டி
தொண்டரென்றோர் வகுப்பில்லை
தொழில் சோம்பலைப் போல் தொழிலில்லை
நாலு வகுப்புமிங் கொன்றே – இந்த
நான்கினில் ஒன்றுகுறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே – செத்து
வீழ்ந்திடும் மானிடச்சாதி
--பாரதி

Saturday, October 14, 2017

Swachh Bharath - Chennai Coporation's help needed

Again after few weeks, today part of Swachh Bharat initiative of Sri Ramakrishna Mission, Mylapore. They are doing every Sundays.
Today it was in Ramakrishna Mission, Free Tuition Centre, at Ramakrishnapuram, Mylapore. Many of the volunteers were children...Thanks to PS Matriculation School, Awakened Citizen Program,(ACP) trained teacher Ms Koteeswari...She came along with students from her school. School has been doing their part on Swachh Bharat,as the Principal is very committed to these initiatives just as she is interested with ACP.
Many students represented nearby schools from Mylapore...Today there were students from PS Hr, Santhome Hr among other schools...
Seen here a boy removing the poster pasted like in many public walls, bridges, parks, buses. I wish that Chennai Corporation can bring strict laws to punish those who past posters and litter the Chennai city. Though these volunteers are nice to do work, is it not wrong on the part of Chennai corporation not taking enough steps/initiative to get rid of this menace of poster culture?
Seen this boy removing poster from another day of Ramakrishna Mission Swachh Bharath on Chitrakulam. This volunteer boy removing poster from Chitra Kulam gate... More photos of todays Swachh Bharath https://photos.app.goo.gl/c7UkyDGXmpYveeJH3

Tuesday, October 3, 2017

கல்வியின் முதல் நோக்கம்

In Bhagavd Gita, Krishna says, among the vidyas I am the Atma Vidya...Where are we today from such Vidya? When is the day that our educationists and Principals/Teachers/Parents and Education Ministers read on and think on these lines to provide such education? Kanchi MahaSwamigal says, http://www.kamakoti.org/tamil/part1kural65.htm
நம் பாரத நாட்டின் முற்காலக் கல்வியின் முதல் நோக்கம் மன அமைதியை அடைவதேயாகும். புதிது புதிதாகத் தோன்றும் பௌதிக விஞ்ஞான ஆராய்ச்சித் துறைகளில் மேன்மேலும் கல்வியைப் பெருக்குவதில் தவறில்லை. ஆனால், அதன் பயனை தர்ம மார்க்கத்தில் மட்டுமே உதவுமாறு செய்தால்தான் நாடும் மக்களும் உயர்வான அமைதி நிலையை அடைய முடியும். இவ்வாறில்லாமல் புலன்கள் போன வழியே அவைகளை பிரயோஜனப்படுத்திக் கொண்டிருந்தால், எத்தனை படிப்பும் விஞ்ஞான அறிவும் இருந்தாலும் கெட்ட எண்ணங்களும் துராசைகளுந்தான் வளரும். இன்னல்களும் துன்பங்களும் பெருகும்.
உண்மையான கல்வி என்பது ஆத்மஞானம் அடைய உதவுவதேயாகும். ஆத்ம ஞானத்தாலேயே மக்கள் அமரத்துவம் அடைகிறார்கள். எதற்கு மேலாக ஒரு பயன் உலகில் இல்லையோ அந்தப் பயனை உண்மைக் கல்வி அளிக்கிறது. மற்ற விதமான கல்விப் பயிற்சிகளெல்லாம் உலகப் பயன்களைத்தான் அளிக்கின்றன. ஆனாலும் அவையும் படிப்படியாகப் பரமாத்மாவை சேர உபயோகப்படலாம். உலகப் பயன் என்பது பொதுவாகப் பொருள் திரட்டுவதையே குறிக்கின்றது. பொருள்கூட பலவித தருமங்களை செய்யப் பயன்படுகிறது. லௌகிக தருமங்களும் பிரம்ம ஞானத்துக்குத் சாதகமாகின்றன. ‘தனக்கு விதிக்கப்பட்ட கர்மங்களைச் சரிவர நடத்துவதாலும், தவத்தினாலும், இறைவனை வணங்கி வழிபடுவதாலும் ஒருவன் ஆத்ம ஞானத்தை அடைகிறான்’ என ஆதி ஆசாரியர்கள் கூறியுள்ளார்கள்.
நம் புலன்களுக்கு மட்டுமே சுக உணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் எளிதில் தரக்கூடிய வகையில் உள்ள எல்லா அம்சங்களையும் போதனா முறையிலிருந்து விலக்கவேண்டும். மேலை நாட்டவரின் நடை, உடை, பாவனை, உணவு, உரையாடல் முதலியவைகளில் ஈடுபட்டு அவைகளைக் கையாளுவோமேயானால் படிப்படியாக நமது பண்பாடு, அறம் இவைகளிலிருந்து நாம் நழுவி, நமது ஆன்ம நலனுக்கு இடையூறு செய்துகொள்வதோடு, புண்ணிய பூமியாகிய இந்தப் பாரத நாட்டுக்கே கெடுதல் ஏற்படுத்தி விடுவோம்.
பாரத நாட்டில் தற்காலம் நமது மக்கள் பெரும்பாலும் சிறு பிராயம் முதலே தம் தேசத்துக்குரிய ஒழுக்கம், பண்பாடு, இறைவணக்கம், ஆத்ம தியானம், இவ்விதமான பழக்கமே இல்லாமலிருந்து வருகின்றனர். விஞ்ஞானத்தைப் பயில்வதில் மட்டுமின்றி வாழ்முறையிலும்கூட வெளிநாட்டாரது முறைகளையே பின்பற்றி வருகின்றனர். இதனால் மக்களுக்கு இந்த உலகத்தின் சாமானிய இன்பத்தையும் மறு உலகத்தின் பேரின்ப வழியையும் அடையத் தடை ஏற்படுகின்றதென்பது தெளிவு. ஆஸ்திகப் பரம்பரையில் தோன்றிய நமது குழந்தைகளுக்குச் சிறு வயது முதலே நமது பண்புக்குரிய தர்மம், ஒழுக்கம், பக்தி, ஞானம் முதலியவற்றைக் கடைப்பிடித்து ஒழுகுவதற்கு அநுகூலமான கல்வியைப் போதிக்க வேண்டியதே நம் முதற் கடமை.

சலங்கை பூஜை மேடை அலங்காரம்

கோவில்களை சுத்தம் செய்ய வேண்டும்....
சாமி சிலைகளை அலங்கரிக்க வேண்டும்.....
கோவில் வாசல்களுக்கு தோரணம் வேண்டும்....
இங்கே மேடைகளை அலங்கரித்து மகிழ்கிறார்கள்...
சலங்கை பூஜை என்றும் மற்றும் பல பெயர்களில் நடன நிகழ்ச்சிகளில் மேடை அலங்காரம் என்னை இவ்வாறு சிந்திக்க தூண்டியது.
தெய்வத்தின் குரல் இதோ
http://www.kamakoti.org/tamil/3dk244.htm
தேவதாஸி ஒழிப்பு ஒரு பக்கம் பண்ணிக் கொண்டு, இன்னொரு பக்கம் கலை அபிவிருத்தி என்று குல ஸ்த்ரீகளையெல்லாம் மேடைக்கு ஏற்றி டான்ஸ் பண்ண வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெரிய மநுஷ்யர்கள் வீட்டுப் பெண் குழந்தைகளுக்கு அக்ஷராப்யாஸம் மாதிரி பரத நாட்டிய அப்யாஸமும் ஏற்பட்டு விட்டது. ஸ்திரீ ரூபத்திலே ஒரு ஸதஸிலே மேடை ஏறி, ஆடை அலங்காரங்களோடு நவரஸங்களைக் காட்டி ஆடுகிறதென்றால் அதனால் ஸாதாரண மநுஷ்யர்கள் இருக்கிற ஸ்திதியில்……. நான் சொல்ல வேண்டாம். ‘நமக்கு ரூபமிருக்கிறது, ஆடத் தெரிகிறது. ஸபையை வசீகரித்து அப்ளாஸ் வாங்க முடிகிறது என்றால் அப்புறம் ‘ஏன் ஸினிமாவில் சேர்ந்து இன்னம் ஜாஸ்தி புகழ் வாங்கக் கூடாது?’ என்று ஆசை உண்டாகிறது. குல ஸ்திரீகளுக்கு இப்படிப்பட்ட எண்ணங்கள் உண்டாகிப் பல பேரோடு நடிப்பது, ஜனரஞ்ஜகம் என்பதற்காக இறங்கிக் கொண்டே போவது என்றெல்லாம் ஆகின்றன. கலையை வளர்க்க வேண்டியதுதான். அதற்காக அதைவிட இந்த தேசப் பெருமைக்கு மூச்சாக இருக்கிற ஸ்த்ரீ தர்மத்தைப் பலி கொடுக்க வேண்டியதில்லை. இதையெல்லாம் யோசிக்காமல் ஸமூஹ சீர்திருத்தம், கலை வளர்ச்சி என்று செய்கிற கார்யங்கள் தேவதாஸிகள் என்று ஒரு ஜாதி மட்டும் தனியாயிருப்பானேன் என்று ……. இப்போது எல்லாவற்றையும் ‘டெமாக்ரடைஸ்’ பண்ணிப் பார்ப்பதாகத் தானே இருக்கிறது? இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது. எல்லாக் கலைகளையும், தொழில்களையும் ஒழுங்காக வளர்ப்பதற்குத்தான் வர்ண வியவஸ்தை, ஜாதி வியவஸ்தை ஏற்படுத்தப்பட்டது. ஏதாவது ஒரு ஜாதியில் வியவஸ்தை கெட்டிருந்தாலும் அதைச் சீர்படுத்தி அதற்கான தொழிலை அதனிடமே விட்டு வைப்பதுதான் பொது தர்மம் கெடமாலிருப்பதற்கு வழி.

Saturday, September 30, 2017

Largest Democracy in the World - Best Definition

https://www.economist.com/news/books-and-arts/21716019-penchant-criminality-electoral-asset-india-worlds-biggest
Indian politics: 34% of the members of parliament (MPs) in the Lok Sabha (lower house) have criminal charges filed against them
I feel,the photo selected in economist web is not an accident, when we know 500 chappals and 10,000 sarees and 100 crore for a private hospital bill or the corruption charges filed and proved in court after death, though the LAW and DEMOCRAZY ALLOWED such politician to be CHIEF MINISTER of state....
Got the attached photo in facebook...it could actually be replaced by any politician irrespective of party...or even the chief minister whose bill was 100 crores?
Will the Prime Minister/Chief Minister/President/MLA/MP of the country send their children/grandchildren to Govt Schools? or Get treated in Govt Hospitals when they fall sick? For these people say they improve Education/Health of the country. Then let them prove it.
Neither these people will do that, nor will there be such a law by the country law makers...because all these are together make people fools...in the name of democracy and justice for all....forgetting how this country was once ruled by Royals.
Kanchi MahaSwamigal gives the best definition on Democrazy below..
புதிய முறையில், நமக்குத் தெரியவரும் அநேக அம்சங்கள் கவலை உண்டாக்குவனவாகவே உள்ளன. மக்களால் மக்களைக்கொண்டு மக்களுக்காக அமைக்கப்பட்ட மக்கள் ஸர்க்கார் of the people, by the people, for the people- என்றெல்லாம் என்னென்னவோ சொல்கிறார்களே – அதெல்லாம் விஷயம் தெரியாத மக்களால். விஷயம் தெரியாத (ஆனால் ஸ்வய நலன் தெரிந்த) மக்களைக் கொண்டு, அவர்களைச் சேர்ந்த சில மக்களுக்காகவே அமைத்த ஸர்க்கார் என்பதாக முடிந்துவிடுமோ என்றுகூட பயப்படும்படி இருக்கிறது.
http://www.kamakoti.org/tamil/part4kural277.htm

Tuesday, September 26, 2017

பூக்களைச் சூடுவதால் ஏற்படும் நன்மைகள் - Medicinal values of flowers

Few of the traditions and medicinal or benefits of flowers and how it can help when kept in the head...I still remember in village temples when flowers like Hibiscus given even to boys/men, they will keep in the ears...Later on Thanks to English education we got a saying to destroy this tradition as 'காதில பூ சுத்தாத'? Little we know that the same Western people will do research on Why people in India do that? Is there any scientific reason and then they will not only publish a report but also claim its their Intellectual Property Rights(IPR). This they have done in many of India's indigenous knowledge like Cow Urine or Neem, Turmeric or Basmatic Rice, Vastu just to name a few.
http://www.thehansindia.com/posts/index/Andhra-Pradesh/2017-09-02/Sans-flowers-women-lose-out-on-medicinal-values/323631
Have a look at this and its shameful to say how extreme examples of brain washing has happened if a school says No to flowers in schools?
And if we look into the history in Europe itself we can see they too loved it once and few still does...
http://www.elleuk.com/beauty/hair/beauty-tips/a38711/kirsten-dunst-rodarte-hair-flower-crown/
British brilliance at its best when they made and continue to make people in India to abandon our traditions. Such anti traditions becomes their change agents as modernists. Anti Traditionalists and continue to destroy the society and world for their narrow agendas of economic success at the expense of everything.
The commercial advertisement shows mainly the Hibiscus which is also included in this list below among many other flowers. They even talk of hibiscus tea...If one says hibiscus drink we may not like but when said as hibiscus tea then we like it...Such is the level of English education impact on our lives.
_*பூக்களைச் சூடுவதால் ஏற்படும் நன்மைகள்:*_
*🌹பூக்களில் உள்ள பிராண ஆற்றல், மூளைச் செல்களால் ஈர்க்கப்பட்டு, நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது.*
*🌹இந்தப் பிராண ஆற்றலானது மனஅழுத்தத்தைக் குறைத்து, மனஅமைதிக்கு உதவுகிறது.*
*🌹தலையில் பூ வைப்பது, மனமாற்றத்துக்கு உதவும். ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்கும் தன்மையைக் கொடுக்கும்.*
*🌹மனஅழுத்தத்தால் ஏற்படும் செல் இழப்பைத் தடுக்கிறது. பூவின் மணமானது உடல் செல்களுக்குப் புத்துணர்வை அளிக்கிறது. மனமாற்றத்துக்கு உதவுகிறது. மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.*
*பூக்களின் பயன்கள்:*_
*🌹ரோஜாப்பூ – தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும்.*
*🌹மல்லிகைப்பூ – மனஅமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.*
*🌹செண்பகப்பூ – வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும்.*
*🌹பாதிரிப்பூ – காது கோளாறுகளைக் குணப்படுத்தும். செரிமானச் சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும்.*
*🌹செம்பருத்திப் பூ – தலைமுடி தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.*
*🌹மகிழம்பூ – தலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கும். பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட பல் குறைபாடுகளை நீக்கும்.*
*🌹வில்வப்பூ – சுவாசத்தைச் சீராக்கும். காச நோயைக் குணப்படுத்தும்.*
*🌹சித்தகத்திப்பூ – தலை வலியைக் குறைக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.*
*🌹தாழம்பூ – நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும். உடல் சோர்வை நீக்கும்.*
*🌹தாமரைப்பூ – தலை எரிச்சல், தலை சுற்றல் போன்றவற்றைச் சரிசெய்யும். மனஉளைச்சலை நீக்கி மனஅமைதிக்கு வழிவகுக்கும். தூக்கமின்மையை நீக்கி, சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும்.*
*🌹கனகாம்பரம்பூ – தலை வலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும்.*
*🌹தாழம்பூ, மகிழம்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ செண்பகப்பூ போன்றவை வாதம், கபத்தைக் குறைக்கக் கூடியவை.* 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
_*பூக்களைச் சூடும் முறை:*_
*🌹பூக்களைக் காதின் மேல் மற்றும் கீழ் நுனியின் இடைவெளியில் சூடவேண்டும்.* *உச்சந்தலையிலோ, கழுத்துப் பகுதியிலோ பூக்கள் தொங்கும்படி சூடக் கூடாது.* *மணமுள்ள பூக்களை வாசனையில்லாதப் பூக்களுடன் சேர்த்துச் சூடக்கூடாது.* *அது கூந்தல் வளர்ச்சியைக் குறைக்கும்.*
*ஜாதி மல்லிகைப்பூ, செவ்வந்திப்பூ, குடசப்பாலைப்பூ, பாதிரிப்பூ, மகிழம்பூ, செண்பகப்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ போன்றவற்றைக் கனகாம்பரத்துடன் சேர்த்துச் சூடினால் மிகவும் நல்லது.*
*🌹மந்தாரை, தாமரை, செவ்வரளி, கருங்குவளைப்பூ போன்றவற்றுடன் கற்பூரத்துடன் சேர்த்துச் சூடினால் மனம் அமைதி பெற உதவும். மல்லிகைப்பூவை குளிப்பதற்கு முன் சூட வேண்டும். முல்லைப்பூ, வில்வப்பூவை குளித்த பின்பு சூடலாம். உடலில் எண்ணெய் தேய்க்கும்போது தாழம்பூ சூடலாம்.*

Sunday, September 24, 2017

தூய்மை இந்தியா நமது பங்களிப்பு

தூய்மை இந்தியா நமது பங்களிப்பு என்ன? இந்த சிந்தையை மக்களின் மனதில் விதைக்க வாருங்கள். பல சத் சங்கங்கள் பல கோவில்களை தூய்மை செய்து வருகிறார்கள். அவற்றுக்கெல்லாம் ஒரு அங்கீகாரம், அல்லது அவர்களை ஊக்குவிக்கிறோமா? செய்திதாள்களில், தொலைக்காட்சிகளில் அவற்றைப் பற்றி செய்திகள் வந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.அவற்றை படித்து,தெரிந்து பலர் தூய்மை இந்தியா திட்டத்தில் நாமும் ஏதாவது செய்யலாம் என்று எண்ணுவார்கள். ஊடகத்தில் இருப்பவர் என்றால் தயவு செய்து நாடு தூய்மை ஆவதற்கு மக்களின் மனம் தூய்மை ஆவதற்கும் நல்ல செய்திகளை எழுதி இத்திட்டங்களை ஊக்குவிற்போம்.
https://photos.app.goo.gl/oFaYLeTsCragJr793
Above photos from CHENNAI SEVAS 180th Uzhavaram on Sunday (24.09.17) from 8.30am onwards @ Arulmigu Thiruvekatamudayan Temple, Chitlapakkam.
ஊடகங்களின் சக்தி மிகப் பெரிது அதை சரிவர செய்த தலைவர்கள் பாலகங்காத திலக் மற்றும் நமது மஹாகவி பாரதியார்...அவர்களின் வழியில் மக்களின் மனதில் தூய்மை இந்தியா எண்ணத்தை விதைக்க நம்மால் முடிந்த செய்தியை மக்களிடம் எடுத்து செல்வோம்.

Tuesday, September 19, 2017

வெள்ளம் வெள்ளம் மும்பையில் வெள்ளமாம்.

வெள்ளம் வெள்ளம் மும்பையில் வெள்ளமாம்.
ஒவ்வொரு வருடமும் நம் நாட்டில் மழை பெய்து நகரங்களிலும் கிராமப்புற பகுதிகளில் வெள்ளம் வருவதாக படிக்கிறோம். இந்த மழை நீரை சேமித்து கோடை காலங்களில் பாசனத்துக்கு உபயோகிக்கலாமே? செய்கிறோமா? நாட்டில் ஒரு பகுதி வெள்ளத்தாலும் வேறு ஒரு பகுதி வறட்சியாலும் பாதிக்கப் படுவதை பார்க்கும் போது 'திட்டமிடல்' என்பது நம் நாட்டில் உள்ளவர்களுக்கு தெரியாத வார்த்தை போல் தோன்றுகிறது.
அதே போல் தக்காளி/உருளை அதிக விளைச்சல் என்று கூறி தெருவில் கொட்டுவார்கள். இன்னொரு பகுதியில் தக்காளி/உருளை விளைச்சல் குறைவால் விலை அதிகம் என்று செய்தி வரும்.
இன்று அறிவியல் விஞ்ஞான வளர்ச்சி கண்டுவிட்டோம் என்று பெருமை சொல்லி சிறுமைகளை செய்திகளில் படிக்கிறோம்.
இதயம் விரிந்தால் மட்டுமே சக மனிதர்களுக்கு உதவ முன் வருவோம். இல்லையேல் எத்தனை அறிவியல் விஞ்ஞான வளர்ச்சி வந்தாலும் இந்த வெள்ளம்/வறட்சி போய் விடாது.
இது பற்றி எல்லாம் சிந்திக்காமல் நாம் உணவை எவ்வாறு பதக் படுத்தி வைக்கலாம் என்று ஆராய்ச்சி வேற பண்ணுறோம். இருக்கிறத பகிர்ந்துக்க தெரியல்ல..என்ன சொல்றது.

Monday, September 18, 2017

பெரியாராம் பெரியார் இவர் யார்?

பெரியாராம் பெரியார் இவர் யார் என்று பார்த்தால்...UNESCO இவருக்கு விருது கொடுத்துள்ளதாம், தமிழ் நாட்டிற்கு ஹிந்தி வேண்டாம் என்றும் ஆங்கிலம் வேண்டும் என்று கூறிய தெலுங்கருக்கு யுனெஸ்கோ விருது கொடுத்ததில் ஆச்சரியம் இல்லை....தமிழ் நாட்டின் (நல்ல)தலைவர்களுக்கு அன்றே பஞ்சம் வந்து விட்டது...இவர் நிஜமாகவே பெரியாரா இல்லை சிறுமை செய்தவரோ...70 வயதில் 32 வயது பெண்ணை(மகள்,பேத்தி வயதுக்கு) மணம் முடித்து முற்போக்கு திருமணத்தை ஆரம்பித்தவர் தான் பெரியாரா? சாதி இல்லை (இந்துக்)கடவுள் இல்லை என்றெல்லாம் கூற இந்துக்களின் தாராள சுதந்திரம் இடம் கொடுத்துள்ளது....இவர்களுக்கு கிறிஸ்தவ மதத்திலும் சரி சீக்கிய மதத்திலும் சரி சாதி இருக்குன்னு தெரியாத பெரியாரோ? இன்னும் வேடிக்கை என்ன வென்றால் இந்துக் கடவுள் இல்லை என்றவருக்கு மலர் தூவி, மாலை போட்டு அவரின் சிலைக்கு மரியாதை செய்தது, மிகவும் முற்போக்கு கொண்ட செயல். அந்த சிலைக்கு பால், அபிஷேகமும், கற்பூரமும் காட்டினால் இந்துக் கடவுள் இல்லை என்றவருக்கு கோவிலே கட்டி வழிபடுவார்கள் இவரை பெரியார் என்று அழைக்கும் சிறியவர்களின் கூட்டம்.
கடவுளின் திருவுருவப் படங்களை எரித்து சிறை சென்றவர்கள் எல்லாம் இந்த தெய்வத் தமிழ் நாட்டில் தலைவர்களாம் பெரியாராம்...இப்போது இந்த மாதிரி புறப்பட்டால் யார் பின்னால் வருவார்கள்...அந்த மாதிரித் தான் இனிவரும் காலம் இந்த ஹிந்தி,சமஸ்க்ரித எதிர்ப்பு எல்லாம்...வருங்காலத்து சரித்திரத்தில் வெறும் கேலிக் கூத்துதான்.அறிவுள்ளவர்கள் இங்கே யார் பெரியார் அல்லது சிறுமையில் பெரியார் என்று சிந்திக்கட்டும்.

Sunday, September 17, 2017

Mylapore schools Joining hands on Swachh Bhara

Sharing with you all today morning Uzhavaaram with Sri Ramakrishna Mission volunteers @ Sri Virupakiswarar Temple, Mylapore...Happened to talk to these little boys who did an excellent work in the morning. As I remember, schools represented PS Hr Sec and PS Matric and Chennai Middle School, near Mandaveli. Wish and Hope school students/teachers in Mylapore joins this weekly initiative even if minimum 5 students and even teachers from each school around Mylapore joins the hands, the impact will be wonderful both for the children and for the service.
Make an announcement in the Friday/Saturday in the school regarding this opportunity and encourage everyone and specially ACP students of classes 7 and 8. https://photos.app.goo.gl/vwAOkdK0vzV2Qph22 Please contact this number to know details of Weekly Uzhavaarm from Sri Ramakrishna Math, Mylapore - 7871255491. Usually assemble 7.30AM and winds up 9.30AM with Prasadam and Tea.

Thursday, September 14, 2017

கோடிகோடி கடன் வாங்கி bullet train ஓடுவோம்

கோடி கோடி IPL கிரிக்கெட் க்கு கொடுப்போம். கோடி கோடி சினிமா எடுத்து பார்த்து ரசித்து மகிழ்வோம்...கோடி கோடி பணத்தை சில மணி நேரத்தில் பட்டாசு வெடித்து மகிழ்வோம்...கோடிகோடி கொடுத்து அல்லது கடன் வாங்கி bullet train ஓடுவோம் ஆனால் நம் ஏழை மக்கள் நம் கண்ணுக்கு தெரிவதில்லை...அவர்களுக்கு ஒரு வீடு இருக்கா என்று சிந்திக்க மாட்டோம்.அவர்களின் வாழ்வு உயர என்ன செய்யலாம் என்று சிந்திக்கிறோமா?
சேவாலயாவில் ஜப்பான் நாட்டு மக்களின் பணமும் British பெண்களின் உழைப்பையும் பார்த்தாவது நம்மை நாம் திரித்திக் கொள்வோமா?
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்.
நான் +2 படித்த போது என் நண்பன் 'வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பீர் என்ற அரசாங்க விருப்பத்தையும், முதலில் எங்களுக்கு வீடு கொடுங்கள் என்ற வீடில்லா மக்களின் விருப்பத்தையும்' புதுக் கவிதை என்று கூறியது எனக்கு நினைவுக்கு வருகிறது.இன்று 25 ஆண்டுகளுக்குப் பின்னல் 'வீட்டில் கழிவறை கட்டுங்கள் என்கிறது அரசு. மரம் வளர்ப்போம் என்பதை மறந்தார்கள், வீடில்லா மக்களுக்கு வீடு கட்ட வேண்டும் என்பதையும் மறந்து விட்டார்கள்.' ஆனால் தூய்மை இந்தியா மட்டும் வேண்டுமாம். வீடே இல்லாதவன் எங்கே போய் கழிவறை கட்டுவான், அல்லது அவன் எங்கே போய் உறங்குவான்? தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. இன்றோ எத்தனை விவசாயிகள் உணவு இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் இருக்க இவர்கள் bullet train கடன் பட்டு ஓட வேண்டுமாம். என்ன ஒரு மக்கள் ஆட்சி.மகாத்மா காந்தி பிறந்த இந்தப் பூமியில் இந்தக் கொடுமையை யார் தடுப்பார்கள்?

Monday, September 11, 2017

First Principals to be appointed through common entrance test across the country

Today I met two Principals of schools in Chennai whose school sent teachers for training in Awakened Citizen Program in 2016 and then not very active this year. When I went in person to find out for the 2nd time. One Principal avoids me to meet and even avoids face to face seeing me. Tells through another teacher that she is very busy. In the other school, Principal makes me stand without offering a seat to sit for couple of minutes, and then without showing interest to listen about the program, calls the coordinator and then both together say that their teachers are too busy to do classes.
What went in my mind? If Principals shows lack of interest for values, then how can teachers have values or how can students have any values?
Both Lady Principals need real value class first, for both needs some sense of discipline in their dress code.See this please http://timesofindia.indiatimes.com/india/Tamil-Nadu-teachers-told-to-mind-their-blouses/articleshow/5345859.cms And one of the Principal needs value class to know she is coming to school and not for a marriage function with so much of jewels on her. I only wished I had the power if I could take some actions against these Principals under whose care children supposed to learn and become better citizen useful for the country.
Setting bad examples in dress code it is no surprise they show lack of interest for value education for their students.
When we debate and protest a common National test or NEET for medical seat. First I felt, we need to reform our education in employing Principals through a National Eligibility test, like Kendriya Vidyalaya how they conduct to employ someone as Principal. Let it be same test and salary be same...Then we bring the same uniformity for employing teachers across the country through common test as eligibility for teaching and pay same salary and have same syllabus in schools. Then we can think of NEET which is certainly needed.

Monday, September 4, 2017

IPL Cricket is it really Indian? And is India really poor?

https://www.theguardian.com/sport/2017/sep/04/ipl-rights-sold-star-india-cricket-twenty-20
world’s richest domestic Twenty20 competition.
What is domestic here?
Players,coaches,umpires, even the so called cheer leaders and girls are also brought from abroad(are they only bringing cheers to the stadium? or brought to the land with much bigger and dirtier agenda?) and paid by the DOMESTIC FANS for few hours of excitement when outside the stadium people sleep on pavements with no proper food and clothes...And then we will read most of malnutrition children are from the very same country, many of the children not attending school are from the same country...and Prime Minister may also wish good luck to the teams and politicians will cheer with those foreign cheer leaders...Well done. Nice entertainment. Is there any activist who is raising these questions? After all its, ENGLISH CRICKET and more important ENTERTAINMENT...who cares about those in the street.
Well here are some Domestic people working for International Players League to play... they get the pitch ready...see the dedication...even if they have nothing to warm themselves in cold weather and climate, they want to warm the pitch....and look at the domestic women working out the hard physical work..they are not wearing any hifunda western dress, but tucked in saree covering their bodies well, not like the English speaking office going women who wants to say its much easier to wear western dress as work involves fast walk and its more comfortable...these women neither knows to speak English nor will they say they want comfortable dress...all they want is some money from a society/Govt which is craving for ENTERTAINMENT and so they suck the blood of these DOMESTIC people...Well why talk of these..."Are you entertained, Is this not why you are here?" Who care about destruction whether its Roman empire or right now our own society?
https://www.youtube.com/watch?v=YbBiXPVKuTA

Sunday, September 3, 2017

நினைக்க முக்தி தரும் திருவண்ணாமலை

நினைக்க முக்தி தரும் திருவண்ணாமலை.இதன் அர்த்தம் இந்த கோவிலின் புராண வரலாறு. ஆணவத்தால் பிரம்மாவும் விஷ்ணுவும் தாம் தான் பெரியவர் என்று வாதிட்டு தொற்றுப் போன ஸ்தலம்...மலையே லிங்கமாக, சிவன் பிரம்மாவின்,விஷ்ணுவின் ஆணவத்தை அழித்த ஸ்தலம். இறைவனை நினைத்தால் ஆணவம் அழியும், ஆணவம் அழிந்தால் முக்தி. இதை ரமண மஹரிஷி மனோ நாசம் என்று மனதை ஆணவம் என்றும் அது அழிந்தால் முக்தி என்றும் சொல்லுவார்.
அருணகிரி நாதர் கோபுரத்தில் கிளியாக இருப்பதாக ஐதீகம், அந்தக் கோபுரத்திற்கு கிளிக்கோபுரம் என்று பெயர். அந்தக் கிளிக்கோபுரத்தில் இருந்து கிளிகள் பறந்ததை படம் பிடித்ததில் ஒரு சந்தோஷம். இக்கோவிலை கட்டியவர்கள் எந்த கல்லூரியில் பயின்றார்கள்?நம்மால் இன்று முன்னேற்றம் என்று கூறிக்கொண்டு இம்மாதிரி கோவில்களை கட்ட முடியுமா?அந்தக் காலத்து கல்வியின் சிறப்பை என்று தான் உணர்வோம்?

Friday, September 1, 2017

ரூ.5.5 லட்சம் கோடி செலவில் 60 நதிகள் இணைப்பு திட்டம்

ரூ.5.5 லட்சம் கோடி செலவில் 60 நதிகள் இணைப்பு திட்டம்
http://www.dinamalar.com/news_detail.asp?id=1846332
நம் முன்னோர்கள் நீருக்கு என்ன செய்தார்கள்? மழைக்கு என்ன செய்தார்கள்...யாகம் செய்தார்கள் என்றும் மழை நீரை அணை கட்டி பாசனம் செய்தார்கள் என்றும் படிக்கிறோம்.
இன்று குளம்,குட்டை,அணை எல்லாம் என்ன ஆயின...இப்போது நதிகளை இணைப்போம் என்றால் அந்த நதிகளே மழை இன்றி வற்றினால் இத்தனை லட்ச கோடி மக்கள் பணம் இத்திட்டத்தை செல்முறை படுத்தும் கம்பெனிகளுக்கு(முக்கிய பங்கு வெளிநாட்டு கம்பெனியாக இருக்கும்) 'ஸ்வாஹா' என்று நினைக்கத் தோன்றுகிறது.
யாகம் மூலம் தேவர்களுக்கு உணவை அக்னியில் 'ஸ்வாஹா' கொடுப்பதால் மழை கிடைக்கும் என்று பகவத் கீதையில் கிருஷ்ண பகவான் கூறி உள்ளார். அவ்வாறு அக்னியில் தேவர்களுக்கு உரிய உணவை அளிக்க தவறினால் நாட்டில் வெள்ளமோ வறட்சியோ வரும் என்றும் மிகத் தெளிவாக பகவத் கீதையில் எச்சரிக்கை செய்துள்ளார்...நாம் இவற்றை எல்லாம் அறிவோமா?
அதே போன்று மாதம் யாரின் ஒழுக்கத்தால் மும்மழை பெய்யும் என்றும் கூறி உள்ளது நம் தமிழ் மொழி.
வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை நீதி மன்னர் நெறியினர்க்கோர் மழை மாதர் கற்புடை மங்கையர்க்கோர் மழை மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே.
http://www.kamakoti.org/tamil/2dk40.htm
இவற்றை எல்லாம் புரிந்து தவறுகளை சரி செய்யாமல் கோடிப் பணத்தை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தனியார் நிறுவனங்களுக்கு 'ஸ்வாஹா' செய்வதை என்ன சொல்வது?

Thursday, August 24, 2017

UNESCO நம் கோவில்களை காப்பாற்றுகிறதா? அழிக்கிறதா?

The department might also get macro level management support from UNESCO to maintain 38000 registered by them Last year, the Madras High Court had asked UNESCO to be part of restoration projects of Tamil Nadu temples. The court has asked the state government to include UNESCO and requested their presence in the court by August 23.
http://www.thenewsminute.com/article/unesco-slams-tn-govt-reckless-conservation-work-historic-temples-submits-report-madras-hc
UNESCO நம் கோவில்களை காப்பாற்றுகிறதா அழிக்கிறதா? என்று கூட விவாதம் செய்யலாம். கோவில்களை ஓரம் கட்டும் யோகா,தியானம் குருமார்களுக்கும் கோவில்கள் அழிவுக்கும், சிலை கடத்தலுக்கும் சம்பந்தம் உண்டா? என்று கூட விவாதம் செய்யலாம்.
நம் முன்னோர்கள் கட்டிய கோவில்களுக்கு நாம் அனைவரும் சென்று செய்தால் கோவில்கள் காப்பாற்றப்படும்.
அவ்வையாரின் ஆத்தி சூடியை பள்ளிகளில் இருந்து விலக்கினோம்...ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற அவ்வையின் வாக்கை மறந்தோம்...விழைவு...நம் கோவில்களை நமது எதிர்காலத்துக்கு எடுத்து செல்வோமா? என்பது நம் முன் நிற்கும் முக்கியமான கேள்வி.

Tuesday, July 18, 2017

ஆலயத்தைக் கேந்திரமாக வைத்தே - கல்வி, கலாசாரங்களும் வளர்ந்தன

ஆலயங்களையும் ஆண்டவனையும் இப்போது பள்ளி,கல்லூரிக் கல்வியில் தேட வேண்டி இருக்கிறது. மத சார்பற்ற கல்வியின் பயனா எல்லா மதங்களையும் கல்வி சாலையில் இருந்து துரத்தி விட்டோம். இதன் விபரீத பலனை தான் நாம் மாணவர்களின் நடத்தையிலும் மக்களின் போக்கிலும் நன்றாகவே பார்க்க முடிகின்றது. இப்போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் செல்வோம்.நம் முன்னோர்களின் வாழ்வில் கல்வி, கலை, ஆண்டவன், ஆலயம், இசை, பண்பாடு இவை எல்லாம் எவ்வாறு சிறப்புற்று விளங்கின என்பதை பார்ப்போம்...அதன் காரணத்தையும் திறந்த மனத்துடன் சற்று சிந்திப்போம்.
http://www.kamakoti.org/tamil/part4kural171.htm
ஏறக்குறைய ஆயிரம் வருஷத்துக்கு முந்தி பல்லவ பாண்டியர்களுக்கு மேலாகப் பிற்காலச் சோழர்கள் எனப்படுபவர்களின் ஆதிக்கம் பரவிற்று. விஜயாலயன் என்பவன் இப்படி மறுபடி சோழர்களுக்குப் புது எழுச்சி தந்த பிற்பாடுதான் பராந்தகன், ராஜராஜன், ராஜேந்திரன் முதலானோர் அவன் வம்சத்திலே வந்து சோழ ஸாம்ராஜ்யத்தைப் பரப்பினார்கள். ஸாம்ராஜ்யம் என்று நீள அகலங்களில் அது பெருகியதைவிட அதிலே கலாசாரம் அதி உன்னதமாகப் பரவியதுதான் அதிகப் பெருமை. பல்லவர் காலத்தில் சிறிய அளவிலும், நடுத்தர அளவிலும் மட்டுமே கட்டப்பட்ட ஆலயங்கள் பெரிய அளவில் விஸ்தாரமாக்கப்பட்டது இந்தப் பீரியடில்தான். இதே ஸமயத்தில் கல்வி - கேள்வி, ஸாஹித்யம், ஸங்கீதம், நர்த்தனம் எல்லாமும் வ்ருத்தியாயின. இதிலே அழகு என்னவென்றால் ஆலயம் பாட்டுக்கு ஒரு பக்கத்தில் வ்ருத்தியாச்சு, கலாசாரம் இன்னொரு பக்கத்தில் அதுபாட்டுக்கு வ்ருத்தியாச்சு, என்றில்லாமல் ஆண்டவனை மையமாக வைத்தே - ஸ்தூலமாக ஆலயத்தைக் கேந்திரமாக வைத்தே - கல்வி, கலாசாரங்களும் வளர்ந்தன.

Saturday, July 15, 2017

Ramakrishna Vidyashala Mysore - An Example to duplicate

Couple of weeks back I was in this wonderful institution which I have read and heard of. Visiting the school and its infrastructure and meeting students and teachers there, made all the difference of wishing why such institutions can not be duplicated in many other cities by Ramakrishna Mission?
I do not know if there is better institutions run by Ramakrishna Mission, but I felt this one with fully residential school with sports including swimming and other music/bhajans and meditation/etc makes it to look upon as the modern Gurukula system.
It would be much better if all teachers are also residential and live with students within the same campus. I even went in one of the class where the shelf was neatly arranged with students notebooks and workbooks. I was there after the school hours and none was there to see that I am seeing their class room. Class room was very neat and clean. Board wiped out and clean.
The whole campus was an inspiration which makes one to think of only learning skills...be it in sports or music and even helping in kitchen or serving food to fellow students or guests... Everyone washing their own plates and eating after saying the prayers...and a regular time to sleep and wake up. Later I listened to one proud alumnus of this great institution who said what he is today is because of this institution. He is the honorary secretary of Seshadri Puram group of educational institutions in Bangalore. Wish we have many people coming forward to have such wonderful institution duplicated in other cities for the benefit of society.